என் ஆசிரியர்
'குழந்தைகளின் எதிர்காலம் '
என்ற அமனஸ்வீலீயின்
காவியத்தை நான்
வாசித்திருக்கிறேன் .
எனக்குத் தெரிந்தவரை
அமனஸ்வீலீயின் காவியத்திற்கு
அடுத்த காவியம்
நீங்கள் தான் !
உங்கள் புன்னகைக்காகவே
ஓடி வந்து
உங்கள் முன்னால்
நின்று ,
'குட் மார்னிங் mam'
சொல்லலாம்
மனித அறிவியலை
புரிந்துக் கொண்டு
கணித பாடம்
எடுத்தது நீங்கள் தான்
உங்கள் வகுப்பில்
மட்டும் தான்
என்னால்
நானாக மட்டுமே
இருக்க முடிகிறது .
உங்கள் வகுப்பில் தான்
முதன் முதலாக
கணிதம் எனக்கு
அழகாக தெரிந்தது
உங்கள் வகுப்பில்
தான் நான்
சந்தோசமாக இருக்கிறேன்
சுதந்திரமாக இருக்கிறேன்
சுயமாக சிந்திக்கிறேன்
"ஏ! நான்
கண்டுபிடிச்சிட்டேன் !"
என்ற உங்கள்
உற்சாகக் குரலில்
நான் ஒவ்வொரு
முறையும் உயிர்ப்பிக்கிறேன் !
நாங்கள் தவறிழைக்கும்போதுக் கூட
"நான் சரியா பார்க்கலையோ "
என்பீர்களே !
ஐய்யோ.... !
நீங்கள் எங்களுக்காக
முதலீடு செய்து
கொண்டேயிருக்கிறீர்கள்
நம்பிக்கைகளையும் ,
பாராட்டுக்களையும் !
இயற் கணித்ததோடு
எங்களுக்கு இலவசமாக
ஊக்கங்களையும் ,
உற்சாகங்களையும் ,
தருகிறீர்கள்
நீங்கள் என்
கனவில் வந்து
கணக்கு நடத்தினாலும் ,
தூக்கக் கலக்கத்திலும்
நான் ரசிப்பேன்
கணிதங்களையும்,
உங்கள் பேச்சுக்களையும் !
உங்கள் சுறுசுறுப்பை
தாழ்மையை , ஆர்வத்தை
கண்டு நான்
அதிசயத்திருக்கிறேன்!
"கடவுளே !
எங்க mam
ரொம்ப நாளைக்கு
நல்ல இருக்கணும்
அவங்க இன்னும்
நிறைய பேருக்கு
கற்றுக்கொடுக்கணும் "
என உங்களுக்காக
நான் வேண்டியிருக்கிறேன் !
நான் யோசித்து
பார்த்திருக்கிறேன் !
நான் ஒருவேளை
ஆசிரியரானால்
உங்களைப் போல
என்னால் இருக்க முடியுமா ?
சந்தேகமே !
டா. ராஜேந்த்திர பிரசாத்தை
குதிரை வண்டியில்
சுமந்து சென்றனர்
அவர் மாணவர்கள் !
உங்களுக்கான
ஆசிரியர் தின வாழ்த்துகளோடு
உங்கள் பெருமைகளையும் ,
நினைவுகளையும் ,
என் கவிதை வண்டியில்
சுமந்து செல்ல
அனுமதிப்பீர்களா mam?
( அனைத்து ஆசிரியர்களுக்கும் , எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் )