காதல் கொண்டேன்

காதல் கொண்டேன்.....
-----------------------
செவ்விதழ் வாய் அசைத்து
செழுமை பொங்க பேசும்
மழலை மொழி மீது!
காரிருள் கிழித்து,
பேரொளி பாய்ச்சும் , காலைக் கதிரவனின்
கதிரொளி மீது!
கொத்து கொத்தாய் மேலிருந்து
முத்து முத்தாய் கீழிறங்கும்
மழைத் துளி மீது!
சிறு துளிகள் சேர்ந்து
வழிகள் தேடி வழிந்தோடும்
எழில் மிகு ஆறுகள் மீது!
பச்சை சோலையாய் ,
காண்போர் கண்குளிரும்
நெல் விளையும் புல்வெளி மீது!
அத்தனையும் இனைந்த
இயற்கை மீது,
இயற்கையை படைத்த
இறைவா உன் மீது!!!!
லி.முஹம்மது அலி