யுத்தம் நித்தம் முத்தம்
![](https://eluthu.com/images/loading.gif)
காயமில்லா யுத்தம்
செய்திடலாம் நித்தம்
எதற்கு இன்னும் வெட்கம்
நெறுங்கிவாயென் பக்கம்
நீ தரும் முத்தம்
அதில் தீரும் என் பித்தம்
தினந்தோறும் காண்போம்
விடியும் முன்னே உச்சம்...
கொஞ்சும் வேளையில்
கூடாது சத்தம்
நாளைக்கும் இருக்கட்டும்
கொஞ்ச(ம்) மிச்சம்...
இளமையில் இருக்கலாமோ பஞ்சம்
கூடினால்தான் விளையும் இன்பம்
கட்டாந்தரைதானே நம் மஞ்சம்
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் மிஞ்சும்
உன்னில் நானும் என்னில் நீயும்
புகுவதுதானே தஞ்சம்
வாழ் நாள் முழுவதும் தொடரும் இன்பம்
இப்போது நமக்கு காமன்தானே சொந்தம்...
அவன் மட்டும் இல்லையென்றால்
ஏதிங்கு பந்தம்?