கனவாகச் சென்ற வாழ்க்கை

பிறக்கும் போது அழுகையுடன் பிறந்தோம்
நம் தாயின் கள்ளமில்லா அரவணைப்போடு!!!

வளரும் போது நம் தந்தையின் பண்புடன்
வளர்ந்தோம் அதட்டலாக அறிவோடு !!!

கள்ளமில்லாத அன்பு , காசற்ற அதட்டலோடு
கிடைத்த பண்பு , மாசற்ற சுவாசத்தோடு கிடைத்த
அந்த தூயமையான காற்று!!!

வெயிலிலும் மழையிலும் வெட்ட வெளியில்
வெளிச்சோட்டமாய் சுற்றித் திறிந்தோம் சுதந்திரமாய்
நுங்கு வண்டியில் ஒரு பயணம்!!!

கள்ளிக் காடும், வயல் வரப்பும் ,செம்மண் புழுதியுமாய்
வலம் வருவோம் ஒரு இடம் விடாமல் ஆனந்தமாய் !!!

கிராமத்திட்கே உரித்தான தமிழ்ப் பள்ளியில் , தமிழோடு
தங்கமான உணர்வுகளையும் உட்கொண்டு ஆளானோம்
நம் தமிழ் வளர்ப்போடு!!!

கருப்பாக இருந்தாலும் காவியமாகத் தோன்றும்
அந்த அழகான கிராமத்து பெண்களுக்கு ஈடாகுமா எவையேனும் !!!

இவை அனைத்தையும் துறந்து இந்த அழகான நினைவுகளோடு
இன்று நகரம் என்னும் ஒரு பெட்டகத்தில் வாழ்கிறோம் !!!

கடந்து வந்த அந்த வாழ்க்கை கனவாகச் சென்று விட்டது இன்று !!!

எழுதியவர் : சோ.வடிவேல் (29-Jul-16, 5:54 pm)
பார்வை : 111

மேலே