டோராவிற்கு ஒரு பட்டாம் பூச்சி -கார்த்திகா

இரண்டு நீல வட்டங்கள் வரைந்து
உள்ளே கருப்பும் பச்சையுமாய்
முட்டைகளிட்டு ஆரஞ்சில் ஊறிய
வரைபட எறும்பிற்கு
இறக்கைகள் கட்டிப்
பறக்கக் கற்றுக் கொடுக்கிறாள்
என் மீனுக்குட்டி
டோராவின் பயணங்களுக்காய்..

எழுதியவர் : கார்த்திகா Ak (19-Aug-16, 12:35 pm)
பார்வை : 165

மேலே