வெங்கடேஸ்வரி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  வெங்கடேஸ்வரி
இடம்:  பெங்களூரு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Jul-2016
பார்த்தவர்கள்:  360
புள்ளி:  11

என் படைப்புகள்
வெங்கடேஸ்வரி செய்திகள்
வெங்கடேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2019 7:21 pm

என்ன தவம் செய்தேன் இப்பிறவி எடுக்க...https://youtu.be/06bEwI1DUrU/.

மேலும்

வெங்கடேஸ்வரி - வெங்கடேஸ்வரி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Jun-2019 7:14 pm

vanakam...............

மேலும்

vanakam...............

மேலும்

வெங்கடேஸ்வரி - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2016 7:26 pm

80-களில் தங்கள் எதிர்கால கணவன் மீது பெண்களுக்கான எதிர்பார்ப்பு என்பது அரசாங்க உத்தியோகம் என்பதாக தான் இருந்தது. நல்ல வேலை, நிலையான வாழ்க்கை. ஏனெனில், அந்த காலத்தில் பெரும்பாலும் பெற்றோர்களின் ஆதிக்கம் பெண் பிள்ளைகள் மீது அழுத்தம் கொண்டிருந்தது.

90-களில் தான் பெண்கள் வெளியுலகில் அதிகம் தங்களது காலடியை எடுத்து வைக்க ஆரம்பித்தனர். எனவே, தங்கள் கனவுகளுக்கு இடமும், மதிப்பும் தரும் ஆணாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.

2000-த்துக்கு பிறகு ஆண்களுக்கு நிகர் என்பதை காட்டிலும், ஆண்களுக்கு மேல் என பெண்கள் வளர தொடங்கிய பொற்காலமாக அவர்களுக்கு மாறியது. சமூக மாற்றம், குடும்ப பொறுப்

மேலும்

உண்மை... அதிலும் குறிப்பாக "எதிர்பார்ப்பு 2" பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு... மற்றொன்று "எதிர்பார்ப்பு 9" பற்றி கூற வேண்டுமென்றால் முற்றிலும் உண்மை.. ஆனால், பெண்கள் மறுநாள் கோர்ட் வாசலில் நிற்க வேண்டிய கட்டாயம் வருவது, விவாகரத்துக்காகவா இல்லை கொலை குற்றத்துக்காகவா என்பது அவரவர் சூழ்நிலையை பொறுத்தது (ஹா ஹா ஹா).... 11-Aug-2016 6:16 pm
வெங்கடேஸ்வரி - Venkatachalam Dharmarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2016 10:04 am

எங்களுக்கும் காலம் வரும் ..

கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார்.

அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர்.
எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

வாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது. தனது, வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்கு முன்பிருந்த கேட்டினை திறந்து கொ

மேலும்

ஹா ஹா ஹா ஹா..... அருமை.... 11-Aug-2016 6:07 pm
வெங்கடேஸ்வரி அளித்த ஓவியத்தில் (public) annadurai raja மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Aug-2016 5:43 pm

Drawn in MS Paint .....

மேலும்

அழகான ஓவியம்...... கைவண்ணம் அழகு!!!!! 14-Dec-2016 5:18 pm
நன்றி தோழரே.... 27-Sep-2016 2:27 pm
Tom or ஜெர்ரி அருமை 16-Aug-2016 7:46 am
நன்றி தோழரே... 11-Aug-2016 2:27 pm
வெங்கடேஸ்வரி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
08-Aug-2016 5:43 pm

Drawn in MS Paint .....

மேலும்

அழகான ஓவியம்...... கைவண்ணம் அழகு!!!!! 14-Dec-2016 5:18 pm
நன்றி தோழரே.... 27-Sep-2016 2:27 pm
Tom or ஜெர்ரி அருமை 16-Aug-2016 7:46 am
நன்றி தோழரே... 11-Aug-2016 2:27 pm
வெங்கடேஸ்வரி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2016 4:33 pm


அந்தநாள்  மலரும் நினைவுகள்   

கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...

முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி ... விவசாயி ....

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி ....
மேலும்

விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லும் முத்து முத்தான வரிகள்.... பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.... 04-Aug-2016 5:55 pm
வெங்கடேஸ்வரி - செல்வமணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2016 12:53 pm

ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக பான் நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்❓
➖➖➖➖➖➖➖➖➖➖
💥💥ரயில் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை💥💥 👉🏿 நீங்கள் உங்கள் முன்பதிவிற்கு PAN Jநம்பரைத் தரும் பொழுது அது சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது 🚉 நீங்கள் பயணிக்கும் பெட்டியில் ரயில்வே நிர்வாகம் ✒ உங்கள் பெயர் ✒ முகவரி ✒ வயது 📁 அடையாள அட்டை எண் ஆகியவற்றை ஒட்டி வைத்திருக்கும். 👉🏿 நீங்கள் PAN நம்பரை முன்பதிவின் பொது கொடுத்திருந்தால் 👉🏿 உங்கள் PAN நம்பர் மற்றும் உங்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை அந்த பெட்டியில் ஒட்டபட்ட தாளில் இருக்கும். 🔴 இங்கு தான் பிரச்சனையே. ⭕ உங்கள் PAN நம்பரை சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. 🅾 எப்படி? 💴 தங்கம் வாங்கும் பொழுது 2 இலட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினால் PAN நம்பர் தேவை ✳ இதனால் சில பெரிய முதலீட்டாளர்களுக்கு பினாமியாக நகை விற்பனையாளர்கள் 🚉 ரயில் பெட்டியில் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது 👤 சமீபத்தில் ஒருவர் 🚉 ரயில் நிலையத்தில் PAN நம்பர் கொடுத்திருக்கும் பயணிகளின் விபரங்களை சேகரித்துள்ளார் 👉🏿 அவரிடம் விசாரித்த பொழுது ஒரு விபரத்திற்கு ரூ.10/- அவருக்கு நகை விற்பனையாளர்கிளிடமிருந்து கிடைப்பதாக கூறியுள்ளார் 👴🏽 குறிப்பாக மூத்த குடிமக்கள் 👩🏻 பெண்கள் விபரங்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளார் 🚊 அதுவும் Sleeper Class-ல் கிடைக்கும் விபரங்களை மட்டும் சேகரிப்பதாகவும் கூறுகிறார் 🚊 ஏனென்றால் Sleeper Class-ல் பயணிப்பவர்கள் ⚪ பெரும்பாலும் வருமான வரி செலுத்துமளவிற்கு வருமானம் இருக்காது 👉🏿 மற்றும் அவர்கள் வேலைக்கு செல்பவர்கலாகத் தான் இருப்பார்கள் 👉🏿 என்ற அனுமானத்தாலும் இவ்வாறு சேகரிப்பதாக கூறியுள்ளார். 🚊 எனவே ரயில் பயணிகளே உங்கள் விபரங்கள் ⭕ இது போல் பயன்படுத்தப் பட்டால் வருமான வரித்துரையிடமிருந்து உங்களுக்குதான் பிரச்சனை வரும். 🚊 ஆகையால் ரயிலில் பயணம் செய்யும் பொழுது Voter ID, Driving License or Ration Card போன்றவற்றை 📁 அடையாள அட்டையாக காட்டவும். 📢 இதை கவனத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் SHARE
செய்யுங்கள்.

மேலும்

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்...நன்றி ஐயா... 05-Aug-2016 9:59 am
வெங்கடேஸ்வரி - கேள்வி (public) கேட்டுள்ளார்
01-Aug-2016 6:04 pm

பெண் சுதந்திரம் என்பதன் உண்மையான பொருள் என்ன?

தற்போதய காலகட்டத்தில் பெண் சுதந்திரம் என்பது எந்த அளவில் உள்ளது?

பெண் சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் காரணிகள் என்ன?

விவாதிப்போம் தோழமைகளே...

மேலும்

அருமையான கருத்துக்கள்.... திரு.கைலாஸ் மற்றும் திரு.பாஸ்கரன் அவர்களே.... அதிலும் குறிப்பாக "பெண்கள் சிறகு விரித்த பறவைபோல் உலகவானில் உலா வர வேண்டும் என்பதே பெண் சுதந்திரம்" என்ற விளக்கம், மனமாற ஏற்றுக்கொள்ள கூடியது... அதே நேரம் பெண்கள் தனது எல்லை தெரிந்து செயல்படுவதும் நல்லது... நாகரீகம் என்ற பெயரில் அரை குறை ஆடைகளை அணிவதும், ஆண்களுக்கு பெண்கள் சமம் என்பதை நிரூபிக்க பப்பும் மப்புமாக திரிவதற்கும் பெயர் சுதந்திரம் அல்ல... அதனால் தான் பெண்கள் தன் அடிப்படை சுதந்திரத்தை கூட இழக்கிறார்கள்.. வெளி கட்டுப்பாடுகள் எத்தனை இருந்தாலும் முதலில் மனக்கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.. பெண்கள் அதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்... இது ஒருபுறம் இருக்க... இன்னொருபுறம் ஆணாதிக்கத்தால் நினைத்து பார்க்க கூட முடியாத அளவிற்கு பெண்களுக்கு துன்பம் நேர்கின்றது... ஆண்கள் பெண்களை விட வலிமையாக படைக்க பட்டதற்கு காரணம், பெண்களை பாதுகாப்பதற்கு தானேயன்றி அவர்களை துன்புறுத்துவதற்கு அல்ல.. பெண்களை மதிக்கவும் அவர்களும் சக மனுஷிதான் என்று புரிய வைக்கவும் பள்ளி, கல்லூரி, சமுதாயம் எனக் காரணிகள் பல இருந்தாலும் முக்கிய பங்கு வகிப்பது குடும்பமே.. அதிலும் குறிப்பாக தந்தையின் பங்கு.. ஒரு ஆண் குழந்தை தன் தந்தையை பார்த்தே வளர்கிறான்.. தன் தந்தை அவர் அம்மா, மனைவி, சகோதரி, பெண் குழந்தைகளை நடத்தும் விதத்தை பார்த்து வளர்கின்றவன் பிற்காலத்தில் தானும் அவ்வாறே நடந்து கொள்வான்.. எனவே பெற்றோர்கள் ஆண்குழந்தைகளுக்கு பெண்களை மதிக்கவும், சக மனுஷியாக நடத்துவதற்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்... பெண் குழந்தைகளுக்கு அவர்களின் உண்மையான அடிப்படை உரிமைகள் என்ன என்பதையும் அவர்களின் எல்லைகோட்டையும் எடுத்து கூறி புரிய வைக்க வேண்டும்... நன்றி தோழமைகளே... மாலை வணக்கம்... 02-Aug-2016 6:50 pm
சரியே பாஸ்கரன் ! உலக வானில் உலாவே வர வேண்டும் என பெண்கள் கனவு காணும்போது பறப்பதிலேயே தடைபடுகின்றனர். சுதந்திரம் என்பது தனது உரிமைகளை செயல்படுத்துவது என்று சொன்னேன் .செயல்படுத்தும் சுதந்திரத்தை அடையுமுன் தனது உரிமைகளை பேசும் சுதந்திரம், அதற்கும் மூலமான சிந்திக்கும் சுதந்திரம் என்று இரண்டு முக்கியமான கட்டங்கள் இருக்கின்றன. சிந்திக்கும் சுதந்திரம் தடைபடுமா என ஆச்சரியம் ஏற்படலாம். சிந்திக்கும் சுதந்திரம் எப்படி தடைபடுகிறது என்று கேட்டால், " நீ பெண்ணாக பிறந்திருக்கிறாய்; நீ ஆணுக்கு அடிமைதான்." endra ennam தலைமுறை thalaimuraiyaaga oru thalaimuraip pennilirundhu, aduththa thalaimuraip pennukku, பின் அதற்கடுத்த தலைமுறை என்று பயணம் செய்து கொண்டே இருக்கிறது.தாய் மகளுக்கு அந்த எண்ணத்தை உண்டுபண்ணுகிறாள்.மகள் பேத்திக்கு உண்டு பண்ணுகிறாள்; இப்படியாக தொடர்கிறது. இந்த சங்கிலி தொடர்ச்சியை முறியடிக்கத்தான் பாரதியார் " நிமிர்ந்த நன்னெஞ்சும் நேர் கொண்ட பார்வையும்'" போன்ற பெண்ணுரிமை கவிதைகள் எழுத ஆரம்பித்தார். வணக்கம்! 02-Aug-2016 9:32 am
பெண்கள் சிறகு விரித்த பறவைபோல் உலகவானில் உலா வர வேண்டும் என்பதே பெண் சுதந்திரம் இறை தேட சென்ற பறவைகளே வழி மாறுகின்றன பெருமளவில் பெண்புறாக்கள் பறப்பதற்கு தடையாய் இருப்பவை மனதிற்கு அடிமையாய் இருக்கும் ஆண்வேடர்கள் 01-Aug-2016 11:51 pm
பெண் சுதந்திரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளும் முன் சுதந்திரம் என்ற சொல்லுக்கு பொருளை தெரிந்து கொள்வோம். சுதந்திரம் என்றால் தனது உரிமைகளை செயல்படுத்துவது. உரிமை என்று சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் செயல்படுத்த முடியுமா? முடியாது. ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. அதாவது, " Your freedom ends where another person's nose begins." . அடுத்தவர்களுக்கு இடையூறில்லாமல் மட்டும் தான் தனது உரிமையை ஒரு நபர் பயன்படுத்த முடியும். அதனால்தான் சட்டம் உரிமைகளை வரையறுக்கிறது. நியாயமான உரிமைகளை செயல்படுத்த ஆண், பெண் இருவருமே அனுமதிக்கப் படுகின்றனர். தர்மம், சட்டம் இரண்டுமே இதை ஆதரிக்கிறது. சரி, பெண் சுதந்திரம் என்ற பேச்சு ஏன் வருகிறது? பெண்ணும் ஆணும் சமமாக சமுதாயத்தால் நடத்தப் பட்டால் அந்தப் பேச்சு வராது.ஆனால் ஆதிகாலத்திலிருந்து, அவ்வாறு நடத்தப் படவில்லை. பெண் ஆணை விட குறைந்த சுதந்திரத்துடன் நடத்தப் பட்டாள். காலப் போக்கில் சிறிது சிறிதாக பெண் சுதந்திரம் கூடிக் கொண்டே வருகிறது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் பெண் சுதந்திரம் திருப்தியான உயரத்தை எட்டவில்லை; எட்ட இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது. சரி, பெண் ஏன் குறைவான சுதந்திரத்துடன் நடத்தப் பட்டாள்? எளிய உண்மைதான்! "வலியோர் எளியோரை வருத்துவர்" என்பதே ஆதி காலத்தில் பெண் தன்னை விட உடல் ரீதியாக பலம் குறைந்தவள் என்பதை தெரிந்து கொண்டான்.தெரிந்ததிலிருந்து துன்புறுத்த ஆரம்பித்தான். சமுதாயம் அதை சரி என்று நினைக்க ஆரம்பித்தது. வெவ்வேறு கால கட்டங்களில், ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சொற்ப எண்ணிக்கை பெண்கள் ஒருவர், இருவர் அல்லது பத்து பேர் இந்த அநியாயத்தை எதிர்த்து துணிச்சலாக போராட ஆரம்பித்தனர். அதனால் சமுதாயத்தில் சிறிது சிறிதாக பெண் சுதந்திரம் வெற்றி பெற ஆரம்பித்தது. அதனால் போராடிய பெண்களில் சிலர் வாழ்க்கை அழிந்ததையும் கேள்விப்படுகிறோம். போராடிய பெண்களின் வெற்றி பின் வந்த பெண்களுக்கு பெண்ணுரிமை என்ற கனியாக கிடைத்ததுuk பெண் உடலால் பலவீனமானவள்தான்.ஆனால் மன உறுதியிலோ புத்திக் கூர்மையிலோ ஆணுக்கு எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல. எல்லா மதங்களும் பெண்ணை ஆணுக்கு சமமாகவே நடத்த சொல்கிறது. வேறுபடுத்துவது மனிதர்கள்தான். ஆண் உடல் பலம் மிக்கவனாயினும், சில சமயங்களில் பிரச்னை தாக்கும்போது, கலங்கி,மன உறுதியையும் சிந்திக்கும் சக்தியையும் இழந்து விடுகிறான். அப்போது அவனுக்கு தைரியமூட்டவும், வழி காட்டவும் வேண்டும் என்றுதான் பெண்ணை ஆணுக்கு சமுதாயம் திருமணம் செய்து வைக்கிறது. அதே சமுதாயம் பெண்ணை பலவீனமானவள், ஆணை முழுதும் சார்ந்தவள் என்று தர்க்க பொருத்தமற்ற முறையில் கூறுகிறது. ஒரு கணணியை எடுத்துக் கொண்டால் அதற்கு பலம் தரும் hardware ஆணைப் போன்றது. அதன் மூளையாக விளங்கும் software பெண்ணைப் போன்றது. மூளை கணனிக்கு அவசியம். அது போல ஆணின் வெற்றிக்கு பெண் அவசியம். பெண் தாய், மனைவி, மகள், சகோதரி தோழி என்று பல வடிவங்களில் சமுதாயத்தில் மக்களுக்கு நன்மை செய்கிறாள். அதனால் அவள் மரியாதையுடன் நடத்தப் பட வேண்டியவள். அதனால் தான் லஷ்மி, சரஸ்வதி துர்க்கை என்று பெண் தெய்வங்கள் போற்றப் படுகின்றன. வேறு ஏதும் விஷயங்கள் தோன்றினால் யோசித்து சொல்கிறேன் சகோதரி வெங்கடேஸ்வரி! 01-Aug-2016 10:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
அண்ணாதுரை ராஜா

அண்ணாதுரை ராஜா

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (3)

அண்ணாதுரை ராஜா

அண்ணாதுரை ராஜா

திருச்சி
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

அண்ணாதுரை ராஜா

அண்ணாதுரை ராஜா

திருச்சி
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே