வெங்கடேஸ்வரி- கருத்துகள்

உண்மை... அதிலும் குறிப்பாக "எதிர்பார்ப்பு 2" பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு...

மற்றொன்று "எதிர்பார்ப்பு 9" பற்றி கூற வேண்டுமென்றால் முற்றிலும் உண்மை.. ஆனால், பெண்கள் மறுநாள் கோர்ட் வாசலில் நிற்க வேண்டிய கட்டாயம் வருவது, விவாகரத்துக்காகவா இல்லை கொலை குற்றத்துக்காகவா என்பது அவரவர் சூழ்நிலையை பொறுத்தது (ஹா ஹா ஹா)....

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்...நன்றி ஐயா...

விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லும் முத்து முத்தான வரிகள்.... பதிவிட்டமைக்கு நன்றி ஐயா....

அருமையான கருத்துக்கள்.... திரு.கைலாஸ் மற்றும் திரு.பாஸ்கரன் அவர்களே.... அதிலும் குறிப்பாக "பெண்கள் சிறகு விரித்த பறவைபோல் உலகவானில் உலா வர வேண்டும் என்பதே பெண் சுதந்திரம்" என்ற விளக்கம், மனமாற ஏற்றுக்கொள்ள கூடியது... அதே நேரம் பெண்கள் தனது எல்லை தெரிந்து செயல்படுவதும் நல்லது... நாகரீகம் என்ற பெயரில் அரை குறை ஆடைகளை அணிவதும், ஆண்களுக்கு பெண்கள் சமம் என்பதை நிரூபிக்க பப்பும் மப்புமாக திரிவதற்கும் பெயர் சுதந்திரம் அல்ல... அதனால் தான் பெண்கள் தன் அடிப்படை சுதந்திரத்தை கூட இழக்கிறார்கள்.. வெளி கட்டுப்பாடுகள் எத்தனை இருந்தாலும் முதலில் மனக்கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.. பெண்கள் அதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்... இது ஒருபுறம் இருக்க...

இன்னொருபுறம் ஆணாதிக்கத்தால் நினைத்து பார்க்க கூட முடியாத அளவிற்கு பெண்களுக்கு துன்பம் நேர்கின்றது... ஆண்கள் பெண்களை விட வலிமையாக படைக்க பட்டதற்கு காரணம், பெண்களை பாதுகாப்பதற்கு தானேயன்றி அவர்களை துன்புறுத்துவதற்கு அல்ல.. பெண்களை மதிக்கவும் அவர்களும் சக மனுஷிதான் என்று புரிய வைக்கவும் பள்ளி, கல்லூரி, சமுதாயம் எனக் காரணிகள் பல இருந்தாலும் முக்கிய பங்கு வகிப்பது குடும்பமே.. அதிலும் குறிப்பாக தந்தையின் பங்கு.. ஒரு ஆண் குழந்தை தன் தந்தையை பார்த்தே வளர்கிறான்.. தன் தந்தை அவர் அம்மா, மனைவி, சகோதரி, பெண் குழந்தைகளை நடத்தும் விதத்தை பார்த்து வளர்கின்றவன் பிற்காலத்தில் தானும் அவ்வாறே நடந்து கொள்வான்..

எனவே பெற்றோர்கள் ஆண்குழந்தைகளுக்கு பெண்களை மதிக்கவும், சக மனுஷியாக நடத்துவதற்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்... பெண் குழந்தைகளுக்கு அவர்களின் உண்மையான அடிப்படை உரிமைகள் என்ன என்பதையும் அவர்களின் எல்லைகோட்டையும் எடுத்து கூறி புரிய வைக்க வேண்டும்...

நன்றி தோழமைகளே... மாலை வணக்கம்...

உணர்த்திய பின்பும் ஊதாசனப்படுத்தப்படுகின்ற அன்பு.... ஒரு போதும் புரியப்படாது... மதிக்கப்படாது... நம்மை வேண்டும் என்று நினைத்தால்.. நாம் தேடிசெல்ல வேண்டியதில்லை.. நம்மை தேடி வரும்...

நிச்சயமாக... உயிருள்ள ஜீவன்களை மதிக்காமல் உயிரற்ற சிலையை வணங்கும் நிலைக்கு இறை நம்பிக்கையாம்... நம் தலைமுறையிலாவது திருந்துவோமே...

ஆமாம்.. இன்னும் மக்கள் ஆட்டு மந்தைகளாகத்தான் இருக்கிறோம்.. சிங்கம் போல் தனித்து சுய சிந்தனையோடு செயல்பட நினைத்தாலும் இந்த கேடு கெட்ட சமுதாயத்தால் ஒடுக்கப்படுகிறோம்... அவ்வளவு ஏன்...பள்ளிக்கூடத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி கொடுக்கின்றனர்... ஆனால் சேர்க்கும் போது என்ன ஜாதி என்று சான்றிதழ் கேட்கின்றனர்.. என்றைக்கு ஜாதி,மதம் வேறுபாடு ஒழிக்கப்படுகிறதோ.... என்றைக்கு பெண்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக வெளியில் நடமாட முடிகிறதோ ... என்றைக்கு மூட நம்பிக்கைகள் அனைத்தும் மறுக்கபடுகிறதோ... அன்றைக்குத்தான் மக்கள் தெளிந்த நற்சிந்தனை பெற்றவர்களாக போற்றப்படுவர்..

அருமை.... ஊருல உள்ள எல்லா அறிவாளியும் நம்ம ஊருல தாயா இருக்காங்க.... :)

உண்மை.... விலைமதிப்பில்லாத நினைவுகள்...

பச்சி ஒறங்கிருச்சு
பால் தயிராத் திருஞ்சிருச்சு,
இச்சி மரத்து
எலகூடத் தூங்கிருச்சு.......
..........................................
ஆத்து மீன்கொழம்பு
அடுப்பில் கொதிக்கையில
ஏழுதெரு மணக்கும்
எனக்குமட்டும் மணக்கலையே..........

# அருமையான வரிகள்........


வெங்கடேஸ்வரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே