நிகழும் பருவம்----முஹம்மத் ஸர்பான்

கண்களை மூடி
பார்க்கும் போது
மனதின் இருள்
மனிதமாகிறது
குருடன் பாடும்
கானம் யாவும்
மூங்கில் தேடும்
அபிநய சுதிகள்
குட்டித் தீவில்
வயது முதிர்ந்த
குருவிக் கூடு
கலைச் சிற்பம்
பூக்கள் வனம்
நடுவே சிறு
முள் மெத்தை
இறை சீதனம்
தேசம் கடந்து
பறந்த பறவை
நஞ்சை தின்று
ஜீவன் உமிழும்
பசுமை நிலம்
வறண்டு போக
உழவன் கனா
பாலையாகும்
பூலோகம் பாயும்
நதிகள் முழுதும்
தோன்றி மறைந்த
யுகத்தின் யாசகம்
குறிஞ்சி மலர்
விரியும் நேரம்
ஓர் அதிசயம்
நிகழும் பருவம்