தர்மராஜன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தர்மராஜன் |
இடம் | : கோபிசெட்டிபாளையம் |
பிறந்த தேதி | : 01-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 178 |
புள்ளி | : 41 |
நான் கிராபிக்ஸ் வடிவமைப்பாளர். நான் பொழுது போக்கிற்காக மட்டுமே எழுதுகிறேன்.
பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்து திருத்தி தெரிவிக்கவும்.
காதலித்து பார்த்தேன்
வீசும்
காற்று தென்றலாய்
தோன்றுகின்றது
பார்க்கும்
பூக்களெல்லாம் உனக்கானதாய்
தெரிகின்றது
உன் காலடி
சுவடெல்லாம் விபூதியாய்
மாறுகின்றது
நீ
உடுத்திய சுடிதார் மட்டும்
எதிரியாய் முறைக்கின்றது
உன்னை
காணாத நாட்கள்
நரகமாய் நகர்கின்றது
நீ
சிரிக்கின்ற நிமிடங்கள்
பகலில் நிலவை உதிர்கின்றது
பகலில்
கனவு காண
பிடிகின்றது
இரவில்
தூக்கமே வெறுக்கின்றது
கண்கள் கிள்ளிய காயம்
புன்னகைக் களிம்பால்
முக்கால்வாசி ஆறிப்போனது
இன்னும் கால்வாசி
ஆறமறுத்து
அழிச்சாட்டியம் செய்கிறது...
கண்ணில் தெரியும் அனைத்தையும்
காட்சிப் பிழையாக
ஆமோதித்துகொண்டு
புருவம் கனத்து
பார்க்கும் பக்கமெல்லாம்
உனை மட்டுமே
நிரப்பச் சொல்கிறது...
தேயும் கால நிலவும்
தேன் பிழியும் என்று கேட்டதுண்டு
பேயன் குலை வாழையை
உடன் பிசைந்தூட்டும்
மகத்துவமென்று
இப்போது தெளிந்தது...
சகுனம் பார்க்க வில்லை
சன்னல் பார்த்து வந்தது
மாயம் இது என்ன
மனசு கனக்கிறது...
ஈதே காதல் என்றால்
இப்படியே நோகட்டும்
இதுதீர மருத்துவம் இனி
இல்லாமல் போகட்டும்.
வெள்ளம்
புகுந்த வீட்டிலிருந்து
வெளியேறுகிறது குடும்பம்..
கட்டப் படும் மூட்டை முடிச்சில்
அவசரமாகத் திணிக்கிறாள்
ஐந்து வயது அமுதா
தன் வண்ணப் பென்சில்களை..
இருளின் மடியில்
விழிமூடிப் பிறந்து
விடியலின்
செந்நிறக் கதிர்விரல்
தொட்டு விழித்திடுவேன்
மலர்...
இருளின் மடியில்
விழிமூடிப் பிறந்து
விடியலின்
செந்நிறக் கதிர்விரல்
தொட்டு விழித்திடுவேன்
மலர்...
என்
இதழ் தழுவி
தேன்சுவை முத்தம்
பெறுவாய் என்று
பூப்படைந்து
ரீங்கார இசைகேட்க
காத்திருப்பேன் !
விடியலின் வாசலில்...
மலரின்
மண(ன)ம் அறிந்து
இதழ் தழுவி
தேன் பருகி
மலரின் பிறப்பை
முழுமைப்படுத்தும் !
தேனீ..!
என்
இதழ் தழுவி
தேன்சுவை முத்தம்
பெறுவாய் என்று
பூப்படைந்து
ரீங்கார இசைகேட்க
காத்திருப்பேன் !
விடியலின் வாசலில்...
மலரின்
மண(ன)ம் அறிந்து
இதழ் தழுவி
தேன் பருகி
மலரின் பிறப்பை
முழுமைப்படுத்தும் !
தேனீ..!
கருவறை சுவருக்குள்
மீண்டுமோர் ஜென்மம்
வேண்டும்.
தாய் உமிழ் பட்ட அன்னத்தை
இரைப்பைக்குள் மீண்டும்
திருடி உண்ண வேண்டும்.
நிழலில் விழுந்து
உலகின் கண்ணாடியில்
என்னை மீண்டும்
உடைக்க வேண்டும்.
உள்ளம் என்ற
புதைகுழியை தூய்மை
எனும் சலவை செய்து
மீண்டும் உலகில்
போராளி வழிப்போக்கனாக
பயணிக்க வேண்டும்.
குன்றும் மண்ணாய்
குழைவதை போல்
கண்ணில் நல்லதாய்
புகுத்தி மீண்டும்
பாவத்தை அளிக்க வேண்டும்.
காதல் என்ற சொல்லில்
மீண்டும் என்னை தொலைத்து
தூரத்தில் உனக்காய்
கவிஞனாய் வாழ வேண்டும்.
எழுதி எழுதி கிழியும்
காகிதம் போல்
புழுதி படிந்த வழியில்
மீண்டும் நட்சத்திரம்
அடுக்க வேண்டும்.
மலரை கற்பழிக்கும்
வாழ்வின் விந்தையை
வளைத்திடலாம் - நும்
மகிழ்ச்சியான முயற்சி கொண்டு....
நாளை வரலாற்றின் பக்கம்
உனதே
காலமே காத்திருக்கு உனக்கு
மகுடம் சூட்டி விட....
சொர்க்க வாழ்வின் திறவுகோல்
அவரவர் கைகளில்....
சாதி மத முத்திரை சாகசம்
செய்திடும் மனம் தளர்ந்திடாதே ....
துயர் உன் பிடரி பிடித்திடும்
தடம் மாறிடாதே....
நிழல் நிஜமாய் நடித்திடும்
தயங்கிடாதே....
சில மனித பேய்களினால்
மூன்றாம் உலக போர் மூளைக்குள்
நிகழ்ந்திடும் தடு மாறிடாதே....
செய்யா செயலுக்கு பழிசொல்
வந்திடும் உடைந்திடாதே
நேற்றைய பூக்களாய் உதிர்ந்திடாதே......
தலைவன் பெயரை சொல்லி
மண்டியிடும் ஒரு கூட்டம்
விழியும் விழியும்
இணைந்து
வலிகளைத் தாண்டி
மனம் இணைந்து
மணம் முடிந்த
காதலே...
மழலை எனும்
அழகான
ஓவியத்தைப் படைக்கிறது ..!