காதலித்து பார்த்தேன்

காதலித்து பார்த்தேன்

வீசும்
காற்று தென்றலாய்
தோன்றுகின்றது

பார்க்கும்
பூக்களெல்லாம் உனக்கானதாய்
தெரிகின்றது

உன் காலடி
சுவடெல்லாம் விபூதியாய்
மாறுகின்றது

நீ
உடுத்திய சுடிதார் மட்டும்
எதிரியாய் முறைக்கின்றது

உன்னை
காணாத நாட்கள்
நரகமாய் நகர்கின்றது

நீ
சிரிக்கின்ற நிமிடங்கள்
பகலில் நிலவை உதிர்கின்றது

பகலில்
கனவு காண
பிடிகின்றது

இரவில்
தூக்கமே வெறுக்கின்றது

எழுதியவர் : நவின் (21-Sep-15, 4:37 pm)
பார்வை : 1188

மேலே