கோலம்
வானிலே மேகங்களின் வரை ஓவியம்
நீரிலே அலைகளின் தொடர் காவியம்
உடலிலே மூச்சு காற்றின் திரு வாசகம்
மனதிலே காதல் அரும்பும் கனவு ஓவியம்
ஜன்னல் ஓர மஞ்சள் வெயில் உறவாடிடும்
படையல் தேடும் காகங்கள் பறந்து ஓடிடும்
அலைபேசி முகப்பில் விரல் அலைந்து தேடிடும்
ஊடல் வந்து காதலின் சுகந்தத்தை களவாடிடும்