மகிழ்ச்சியின் முயற்சி 1-ஆனந்தி

வாழ்வின் விந்தையை
வளைத்திடலாம் - நும்
மகிழ்ச்சியான முயற்சி கொண்டு....

நாளை வரலாற்றின் பக்கம்
உனதே
காலமே காத்திருக்கு உனக்கு
மகுடம் சூட்டி விட....

சொர்க்க வாழ்வின் திறவுகோல்
அவரவர் கைகளில்....

சாதி மத முத்திரை சாகசம்
செய்திடும் மனம் தளர்ந்திடாதே ....

துயர் உன் பிடரி பிடித்திடும்
தடம் மாறிடாதே....

நிழல் நிஜமாய் நடித்திடும்
தயங்கிடாதே....

சில மனித பேய்களினால்
மூன்றாம் உலக போர் மூளைக்குள்
நிகழ்ந்திடும் தடு மாறிடாதே....

செய்யா செயலுக்கு பழிசொல்
வந்திடும் உடைந்திடாதே
நேற்றைய பூக்களாய் உதிர்ந்திடாதே......

தலைவன் பெயரை சொல்லி
மண்டியிடும் ஒரு கூட்டம்
நீ தலை வணங்கிடாதே....

மனக்கோட்டை கட்டு முயற்சிக்குள் -ஒரு நாள்
நிச கோட்டை ஆகும் வெற்றிக்குள்...

சக்கரமாய் சுழன்றிடு முயற்சிக்குள்
காலம் சுழன்றாலும் - உன்
வெற்றிக்கு ஓர் நாள் அடி பணியும்....

முயற்சியை மகிழ்ச்சியோடு உபசரி
வெற்றியே மண்டியிடும் உன்னிடம்.....

உன்னை தரித்திரமாய் நினையாதே
நாளைய சரித்திரமே நீ தான்....

தன் வறுமை களைந்திட
தன்மனத்தோடு முயற்சித்திடு போதும்.....

சம நிலை மறுக்கின்ற மனதை
முயற்சிக்கு அடிமைபடுத்து
எல்லாம் சுகப்படும்....

நாளைய அதிகாலை புலர்வதே
உன் வெற்றியை நோக்கி தானே
நல்வரவு விளக்கை ஏற்றி வை......

எழுதியவர் : ஆனந்தி .ரா (17-Nov-15, 8:16 pm)
பார்வை : 792

மேலே