மகிழ்ச்சியின் முயற்சி-ஆனந்தி

முடியும் என்பது முன்னேற்றம்
முடியாது என்பது பின்னேற்றம் ....

முயற்சிக்கு முதலில் தட்டி கொடு
நம்பிக்கை இன்மையை விட்டுவிடு....

காலம் உண்டு நமக்கும் என எண்ணிடு
அவமானங்கள் என்றால் புறம் தள்ளிடு....

தோல்விகளுக்குள் புதைந்திடாதே - உன்
ஒற்றை புன்னகையில் உடைத்தெறி....

கவனம் முழுவதையும் இலக்கில் வை
துக்கம் என்றால் தொலைவில் வை....

நேற்றைய மலர்கள் உதிர்வதனால்
இன்றைய மலர்கள் மலராமல்
விட்டு விடுவதில்லை....

காற்றை பின் தள்ளி சிறகை முன் விரிக்கும்
பறவையின் பயணிப்பு
முயற்சியின் வெற்றி தானே....

உமக்கும் எமக்கும் எதில் நம்பிக்கை
மகிழ்ச்சியான முயற்சியில் தானே...

உதறி எழு வெற்றி சமீபத்தில் தான்....

எழுதியவர் : ஆனந்தி .ரா (17-Nov-15, 7:50 pm)
பார்வை : 634

மேலே