பட்டினத்தார் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பட்டினத்தார் |
இடம் | : தென் துருவம் |
பிறந்த தேதி | : 26-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 342 |
புள்ளி | : 119 |
இது மூன்றாம் பிறப்பு
இரைப்பை முழுவதும்
நிரம்பி இருக்கிறது
பசி...
நம்பி நெருங்கியவர்களை
விட்டு விடுவதில்லை
நெருப்பு...
கண நேரத்தில்
நூறு பிறவி
உடைந்த கண்ணாடி...
இன்று யாரோ
நாளை நானும்
மரணம்...
பிரிவில் கிடந்தும்
நம்மை சேர்க்கிறது
தண்டவாளம்...
முதியோர் இல்ல கனவு
பதறும் தாய் -பரவாயில்லை
தூங்கு மகன்...
சாலைகள் முழுவதும்
பூக்களின் மழை
விதவையின் இறுதி யாத்திரை...
ஊர் காக்கும் கடவுளுக்கு
அழகாய் போட்டனர்
ஏழெட்டு பூட்டு...
நிலவு சிறைப்பட்டு
கலங்குகிறது
குளத்தினில் கல்...
பூதாகரமாய் தெரிகிறது
காட்சிகள்
அப்பத்தாவின் கண்ணாடி...
நடமாடும் நதிகள் - 14 - சொ. சாந்தி
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
"ஆணவம்பிடித்தவர்" குற்றச்சாட்டுகளில்
அடக்கம் செய்யப்படுகிறது
திறமைகள்..!! (1)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
ஏறிக்கொண்டே இருக்கிறேன்
இறங்கிக்கொண்டே இருக்கிறது
படிகள்..!! (2)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
உயரத்திலிருந்து விழுந்தாலும் ஊனமாவதில்லை
உற்சாகமுடன் ஓடுகிறது
அருவி..!!
மகன் பேய்க் கதை கேட்பான்
நான் உடனே கதை சொல்லிவிடமுடியாது
இரண்டு கடைவாய் ஓரங்களிலும்
செயற்கைப் பல் வைத்து
கண் இமைகளின் உள் சிவப்பினை மடித்து
கைவிரல்களை விரித்து
கண்களை உருட்டி
கதையை ஆரம்பிக்க வேண்டும்,
அவனோ என் கைவிரல்கள் விரியும் முன்னமே
தன் இருகைகளாலும் கண்களை மூடிக்கொண்டு
கதை கேட்கத் துவங்குவான்
இதுவரை என் கதை சொல்லும் உடல்மொழியை
அவன் பார்த்ததேயில்லை
இருந்தும் ஒருவேளை அவன் கண்திறக்க நேர்ந்தால்
ஒரு தகப்பனின் உண்மை என்ற பிம்பம்
அவனுள் உடைந்து விடாதிருக்க
அடுத்தடுத்த நாட்களிலும் அப்படியே தொடர்கிறது
அவனின் பேய்க்கதை கோரிக்கையும்
என் கதை சொல்லும் வாடிக்கையும்.
என்னால் `மெழுகை`
அப்படியே திண்ணமுடியாது
எனத் தெரிந்த நீங்கள்
ஆப்பிள் பழமொன்றின் மேலே
தடவிக்கொடுத்தீர்கள்
மிளகாய்த் தூளில் கலக்கும்
செங்கல் தூளும்
சிவப்பாக கிடைக்காத
உங்கள் கவலையை
`சூடான் ரெட்` ரசாயனம்
போக்கியிருக்கக் கூடும்
பறித்த காய்களை
`கார்பைட்` துணையோடு
அன்றே பழுக்க வைத்து,
எங்களைப் பசியாற்றும்
கூடுதல் ஆவல்
எப்போதும் உங்களுக்கு
இன்னும் துளசியைக்கூடப்
பருகப் பழகாத எங்களை
தேயிலையோடு
`மஞ்சனத்தி` மர இலையையும்
பருகப் பழக்கியது
உங்களுக்கு பெருமைதான்
இருப்பினும்,
என் மரணத்தின் பேரில்
உங்களின் அவசரம்
எனக்கொன்றும் புரியாமலில்லை...!
கொஞ்சம் உணவுக்காகவும்
நிறைய சுயமரியாதைக்காகவும்
நடக்கிறது,
தாக்குதல் தொடர்பான
திட்டமிடல்கள் யாவுமே
கூரிய பற்களையும்
திணவெடுத்த தோள்களையும்
எதிரியின் குடல் சரிக்கும்
கால் நகங்களையும்
நேரில் பார்க்கும் திராணியில்லை
உங்களுக்கு...,
ஆனால்,
நிறைய மஞ்சளும்
கொஞ்சம் கருப்பு வர்ணமும் இருந்தால்
பயமில்லாமல் புலியை
வரைந்துவிடுகிறீர்கள்...
வெளிக் காற்றுக்குப் பயந்து
பூட்டிய ஓர் அறையிலிருந்து
வியர்வை ஏதும் சிந்தாமலே
புலிகள் எம்மை
`பூனை` வகைக் குடும்பம் என்று
வகைப் பிரித்த
உங்களின் ஏளனத்தை மட்டும்
எங்களால்
தாங்கிக்கொள்ளவே முடியவில்லை...
சூரியன் வந்து சுடும்போது
அலவாங்கு போட்டு நெம்பினாலும்
எழும்பாமல் புரண்டுபடுக்கும்
கும்பகர்ணர்கள்
அதிகாலையில் எழுந்து குளித்து
அழகிய ஆடையுடுத்து
கண்ணாடி முன் நீண்டநேரம்
செலவிட்டு
காலத்துக்கேற்ப தலைவாரி
வாசனை திரவியமிட்டு
பள்ளிக்கூடம் போகும்
பழக்கத்தை உருவாக்கிவிடுகிறார்கள்
தெருவிற்கு புதிதாய்
குடிவந்துவிடும் அழகிகள்!
*மெய்யன் நடராஜ்.
என் அடையாளங்கள்
என்னோடு இருக்கட்டும்
எவர்மீதும் அதைத் திணிக்கவோ
எவருக்கும் தாரைவார்க்கவோ
எனக்கு விருப்பமில்லை ...
உன் அடையாளங்களை
நீ பத்திரப்படுத்து...
வேட்டியணிந்தவன்
கோமணவாதிகளின் ஊரில்
கேவலமாயின்று
தெரியலாம் ...?
நல்லவனாய் நீ
நடக்கையில்
நமட்டுச் சிரிப்புடன்
நகரும் மனிதர்களால்
உன் முகங்கள்
சிலநேரம் சிதையலாம்
முகமூடி மனிதர்களின்
முகம் உணரும் முன்னரே
குரூர மனிதர்களின்
குழந்தை சிரிப்பினில்
உன்னை ..நீ
தொலைக்கலாம்
'தான் வாழ '
பிறர் இதயத்தை
குத்திக் கிழிக்கும்
குள்ளநரி கூட்டத்தின்
அடையாளங்கள்
உனக்கெதற்கு ...
உன் இதயம் குத்திக்கிழிக
இன்று 10.10.2015 ....என்னைத் தேடி வந்த உறவுகள் .....என்னை நம்பி நாடி வந்த நட்புகள்
1) "தோல்வி கண்டு துவளாதே " என்ற தலைபில் 10 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுத வேண்டும் .
2) பிர மொழி கலவாமல் இருக்க வேண்டும்.
3) கவிதை சமர்பிபவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) பதிவு (Register) செய்தல் வேண்டும்.
இப்படிக்கு
கோபிநாத் து .-7502391454
சமூகம் என்பது நான்கு பேர்
அந்த நான்குபேரில்
ஒருவர் குறைந்தாலும்
என் பாடை கவிழ்ந்துவிடும்
நம்பிப் பாடையிலும் ஏறமுடியவில்லை
நான்குபேரும் நான்குவிதமாக
எந்தத் திசையில் பயணிப்பாா்கள்
என்றே தெரியவில்லை
நல்ல வேளையாக
ஆறுக்கு நான்கு அடி குழிவெட்ட
இரண்டு பேர்தான் அனுப்பப்பட்டுள்ளாா்களாம்
இல்லையென்றால்
நான்குவித யோசனையில்
வெட்டப்படும் அரைகுறை குழியில்
உடல் அரிக்கும்வரை
கால்நீட்டிக் கூடக் கிடக்கமுடியாது
பதினாறாம் நாள் காாியத்தை
உடன்பாலாக முடித்துவிடுங்களேன்
பேயாகும் வாய்ப்புப் பெற
சில அதிகாாிப் பேய்களின்
அனுமதிக்கு அலைய வேண்டும் நான்...!