நடமாடும் நதிகள் - 35 - ஆனந்தி

இரைப்பை முழுவதும்
நிரம்பி இருக்கிறது
பசி...

நம்பி நெருங்கியவர்களை
விட்டு விடுவதில்லை
நெருப்பு...

கண நேரத்தில்
நூறு பிறவி
உடைந்த கண்ணாடி...

இன்று யாரோ
நாளை நானும்
மரணம்...

பிரிவில் கிடந்தும்
நம்மை சேர்க்கிறது
தண்டவாளம்...

முதியோர் இல்ல கனவு
பதறும் தாய் -பரவாயில்லை
தூங்கு மகன்...

சாலைகள் முழுவதும்
பூக்களின் மழை
விதவையின் இறுதி யாத்திரை...

ஊர் காக்கும் கடவுளுக்கு
அழகாய் போட்டனர்
ஏழெட்டு பூட்டு...

நிலவு சிறைப்பட்டு
கலங்குகிறது
குளத்தினில் கல்...

பூதாகரமாய் தெரிகிறது
காட்சிகள்
அப்பத்தாவின் கண்ணாடி...

எழுதியவர் : ஆனந்தி (11-Mar-16, 6:19 am)
பார்வை : 731

மேலே