என் மரணத்தில் உங்களின் அவசரம்

என்னால் `மெழுகை`
அப்படியே திண்ணமுடியாது
எனத் தெரிந்த நீங்கள்
ஆப்பிள் பழமொன்றின் மேலே
தடவிக்கொடுத்தீர்கள்

மிளகாய்த் தூளில் கலக்கும்
செங்கல் தூளும்
சிவப்பாக கிடைக்காத
உங்கள் கவலையை
`சூடான் ரெட்` ரசாயனம்
போக்கியிருக்கக் கூடும்

பறித்த காய்களை
`கார்பைட்` துணையோடு
அன்றே பழுக்க வைத்து,
எங்களைப் பசியாற்றும்
கூடுதல் ஆவல்
எப்போதும் உங்களுக்கு

இன்னும் துளசியைக்கூடப்
பருகப் பழகாத எங்களை
தேயிலையோடு
`மஞ்சனத்தி` மர இலையையும்
பருகப் பழக்கியது
உங்களுக்கு பெருமைதான்

இருப்பினும்,
என் மரணத்தின் பேரில்
உங்களின் அவசரம்
எனக்கொன்றும் புரியாமலில்லை...!

எழுதியவர் : பட்டினத்தார் (18-Dec-15, 2:28 pm)
பார்வை : 292

மேலே