முதிர்ந்த முதுமை
பல துன்பங்களை
கண்டும்
இன்பங்களாக பேசிய
காலம் மறைந்து
மரணத்தை கண்டு
வாழ்ந்ததை நினைக்கும்
பூர்வமே இது
பூத்து கிடந்த
பூ கம்பமாய்
காய்ந்து கிடக்கின்றது
கவளையான வாழ்க்கையாய்
இனிமையாய் கிடந்த உன்
உணர்வை கண்டு
மரபகேள் மறைந்து
உறவுகளின் கண்ணுக்கு
படவில்லை பாவம் படைக்காத
உன் உளத்துக்கு
ஊசி போன உணவும்
ருசியாக இருந்ததும்
ஒருகாலம்
நீ பசியால்
உலகைவிட்டு பிரிந்ததே இந்த மாதம்
கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவில் -