அழகிகள்
![](https://eluthu.com/images/loading.gif)
சூரியன் வந்து சுடும்போது
அலவாங்கு போட்டு நெம்பினாலும்
எழும்பாமல் புரண்டுபடுக்கும்
கும்பகர்ணர்கள்
அதிகாலையில் எழுந்து குளித்து
அழகிய ஆடையுடுத்து
கண்ணாடி முன் நீண்டநேரம்
செலவிட்டு
காலத்துக்கேற்ப தலைவாரி
வாசனை திரவியமிட்டு
பள்ளிக்கூடம் போகும்
பழக்கத்தை உருவாக்கிவிடுகிறார்கள்
தெருவிற்கு புதிதாய்
குடிவந்துவிடும் அழகிகள்!
*மெய்யன் நடராஜ்.