மரணத்திற்கு அப்பால்

சமூகம் என்பது நான்கு பேர்
அந்த நான்குபேரில்
ஒருவர் குறைந்தாலும்
என் பாடை கவிழ்ந்துவிடும்

நம்பிப் பாடையிலும் ஏறமுடியவில்லை
நான்குபேரும் நான்குவிதமாக
எந்தத் திசையில் பயணிப்பாா்கள்
என்றே தெரியவில்லை

நல்ல வேளையாக
ஆறுக்கு நான்கு அடி குழிவெட்ட
இரண்டு பேர்தான் அனுப்பப்பட்டுள்ளாா்களாம்
இல்லையென்றால்
நான்குவித யோசனையில்
வெட்டப்படும் அரைகுறை குழியில்
உடல் அரிக்கும்வரை
கால்நீட்டிக் கூடக் கிடக்கமுடியாது

பதினாறாம் நாள் காாியத்தை
உடன்பாலாக முடித்துவிடுங்களேன்
பேயாகும் வாய்ப்புப் பெற
சில அதிகாாிப் பேய்களின்
அனுமதிக்கு அலைய வேண்டும் நான்...!

எழுதியவர் : பட்டினத்தாா் (7-Oct-15, 9:55 am)
Tanglish : maranathirkku appal
பார்வை : 138

மேலே