மீத்தேன் உண்டு வாழ முடியுமா

சோழ நாட்டு விளைநிலங்கள்
ஏனோ இன்று
சோகம் காணும் விலைநிலங்கள்
மரம் ஏறி எடுத்திடும் தேனால்
உயிர் வாழும்
நிலம் தோண்டி எடுத்திடும் மீத்தேனால்
பயிர் சாகும்


நெற்களஞ்சியம் என்று
ஒரு ஊர் ஒன்று
எங்கள் நாட்டிலும்
இருந்தது அன்று
என சொல்லிடும்
காலமொன்று
விரைந்து வரும்
விளைநிலம் துளைத்து
விவசாயம் தொலைத்து
மீத்தேன் எடுத்திட்ட
வினையின் பயனை
நிறைந்து தரும்

உழுது வாழும் உழவன்
மனதால் அழுது இறக்கிறான்
தினமும் அவனால் உணவு உண்ணும்
பல பேர் ஏனோ
அதனை மறக்கிறான்

பலரைக் கவரும் கவிதை
நானும் நிறைய எழுதினேன்
உழவன் கவலைக் குறைய
வேண்டி மட்டும் இந்த
வரிகள் எழுதினேன்
சொல்லிய உண்மைகள்
நீயும் உணர்ந்திடு
எண்ணிய நன்மைகள் பிறக்கும்
முடிந்தால் இதையும் பகிர்ந்திடு ..

எழுதியவர் : நிரஞ்சன் (7-Oct-15, 9:34 am)
பார்வை : 79

மேலே