நிரஞ்சன் பாபு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நிரஞ்சன் பாபு |
இடம் | : தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : 04-Dec-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 112 |
புள்ளி | : 27 |
நட்பில்லை நடிப்பில்லை
உறவில்லை உறங்கவுமில்லை
அருகினில் வந்து பேசவுமில்லை
தொலைவினில் நின்று கை வீசவுமில்லை
தொலைபேசி தொல்லைகள் இல்லை
உன் பார்வை சத்தம் கேட்டு மிதந்து நின்றேன்
காதலுக்கு மூனு அடி தூரம் நகர்ந்து நின்றேன்
பெயரில்லா ஊரிலே பேருந்து நிற்குமா?
பேசிடாத உறவுகள் நினைவினில் நிற்குமா?
நின்றால் என்ன ??
கடந்தால் என்ன ??
நூறு வயது மூன்று முறை தாண்டி
நீ சிரித்து வாழும் போதும்
என் சாயல் முகம் ஒன்று கண்டால்
மின்னல் வெட்டிடும் ஒரு நொடி
உன் எண்ணம் தொட்டிடும் என் எண்ணம்...
சுற்றி வந்த
கருவிழிகள் காந்தம்
போல என் மேலே
விழியசைவு அழகு
என்னை உறையவைக்கும் தன்னாலே
உன் நாணம் கொஞ்சம்
கண்ட என் நெஞ்சம்
கெஞ்சும்
மஞ்சள் நிறம்
மதியம் வந்த வரம்
நீ சென்ற இடம்
இனி இல்லை தடம்
நெடுநேரம் உன்னைக்
கண்கள் காணவில்லை
ஆனால் கவலையொன்றும்
இல்லை
இருந்தும் இன்று
என் கவிதையழகு நீயே!!
பறந்து விரிந்த பால் வெளியில்
வழியறியா நிற்கையிலே
விண்கல்லொன்று என் விழியருகே
சீறிச் செல்கயில் என் உயிர்
என்னிடம் சொல்லாமல்
உயரச்சென்று திரும்பி வந்ததே
கோடி விண்மீன்கள் ஒன்று போல
கூடி என்னைப் பார்க்க
குழம்பி நின்றேன் சில நொடிகள்
புலம்பி நின்றேன் சில நொடிகள்
மறுமுறை சிந்தையில் ஒரு
எண்ணம் வருமுன்னே
நின்ற இடம் தூக்கி எரிந்தது
நில்லாமல் வேறொரு
இடத்தில் விழுந்தேன்
அதுவும் நான் அறியா இடமே
நீரில்லை சோரில்லை
நினைவுகளும் இல்லை
உறவுகளும் இல்லை
அவை தரும் உணர்வுகள் இல்லை
விடையில்லா வினாக்கள்
மட்டும் தடையின்றி
என்னுள்.
தூரமாய் ஒளியொன்று
என் மேல் வீச
மெல்லிய குரலில்
நானும் பேச
எதிர
என் பஞ்சணையில்
ஓரம் நீ உறங்குகிறாய்
உன் சிந்தனையால்
நானோ கிரங்குகின்றேன்
நீ இல்லாத வாழ்க்கை
இனி கற்பனையில் இல்லை
சற்று நிதானமாய் நினைத்தால்
என் விரல் தீண்டிடும்
உன் முகமோ நவீன
அழகுத் தொல்லை
உன் ரகமோ ஓராயிரம்
உன் அடிமைகள் நூறாயிரம்
நாம் ஒன்றாய் இருப்பதை
கண்டிடும் கண்கள் பொறாமை
கொள்ளும்
என் விரலோ உன்
மெல்லிய கண்ணங்கள்
வருடும்
உறக்கம் கண்களை
கைது செய்யும் நொடி வரை
உன் முகம் காண்கிறேன்
என் விடியல் வந்ததும்
மீண்டும் உன்னையே
தேடுவேன்
அழகிய அரக்கியே -பலருக்கு நீயே
முதல் காதலி!!
நிலவே நீல வண்ண
உடை உடுத்தி
அந்த நொடி என்னைக்
கடத்தி
நீ என்னுடன் பேசிய
மொழிகளை யாரும்
கேட்கவுமில்லை
உன் விழி பேசிய
அழகினை பிறர்
பார்க்கவுமில்லை
அரை நொடி உன்
விழி என்னை
வேட்டையாடிய பொழுது
நங்கையின் நாணத்தை
நான் சில நொடி கொண்டேன்
என் துணிச்சலை உன்
சிரித்திடும் விழிகளில்
அடிக்கடி கண்டேன்
உன் விழிகளின் அழகு
தமிழ் மொழியுடன்
போரிடும்
அதிலும் தமிழே
வென்றிட நேரிடும்
தோற்கும் அழகு
உனதே
உன் கைகள் கோர்க்கும்
கரங்கள் எனதே...