உன் எண்ணம் தொட்டிடும் என் எண்ணம்

நட்பில்லை நடிப்பில்லை
உறவில்லை உறங்கவுமில்லை
அருகினில் வந்து பேசவுமில்லை
தொலைவினில் நின்று கை வீசவுமில்லை
தொலைபேசி தொல்லைகள் இல்லை
உன் பார்வை சத்தம் கேட்டு மிதந்து நின்றேன்
காதலுக்கு மூனு அடி தூரம் நகர்ந்து நின்றேன்
பெயரில்லா ஊரிலே பேருந்து நிற்குமா?
பேசிடாத உறவுகள் நினைவினில் நிற்குமா?
நின்றால் என்ன ??
கடந்தால் என்ன ??
நூறு வயது மூன்று முறை தாண்டி
நீ சிரித்து வாழும் போதும்
என் சாயல் முகம் ஒன்று கண்டால்
மின்னல் வெட்டிடும் ஒரு நொடி
உன் எண்ணம் தொட்டிடும் என் எண்ணம்...

எழுதியவர் : நிரஞ்சன் பாபு (18-Jan-21, 12:37 am)
சேர்த்தது : நிரஞ்சன் பாபு
பார்வை : 183

மேலே