என் கவிதையழகு நீயே

சுற்றி வந்த
கருவிழிகள் காந்தம்
போல என் மேலே
விழியசைவு அழகு
என்னை உறையவைக்கும் தன்னாலே
உன் நாணம் கொஞ்சம்
கண்ட என் நெஞ்சம்
கெஞ்சும்
மஞ்சள் நிறம்
மதியம் வந்த வரம்
நீ சென்ற இடம்
இனி இல்லை தடம்
நெடுநேரம் உன்னைக்
கண்கள் காணவில்லை
ஆனால் கவலையொன்றும்
இல்லை
இருந்தும் இன்று
என் கவிதையழகு நீயே!!

எழுதியவர் : நிரஞ்சன் பாபு (18-Jan-21, 12:10 am)
சேர்த்தது : நிரஞ்சன் பாபு
பார்வை : 301

மேலே