அலைபேசியே- நீ ஒரு அழகிய அரக்கி
என் பஞ்சணையில்
ஓரம் நீ உறங்குகிறாய்
உன் சிந்தனையால்
நானோ கிரங்குகின்றேன்
நீ இல்லாத வாழ்க்கை
இனி கற்பனையில் இல்லை
சற்று நிதானமாய் நினைத்தால்
என் விரல் தீண்டிடும்
உன் முகமோ நவீன
அழகுத் தொல்லை
உன் ரகமோ ஓராயிரம்
உன் அடிமைகள் நூறாயிரம்
நாம் ஒன்றாய் இருப்பதை
கண்டிடும் கண்கள் பொறாமை
கொள்ளும்
என் விரலோ உன்
மெல்லிய கண்ணங்கள்
வருடும்
உறக்கம் கண்களை
கைது செய்யும் நொடி வரை
உன் முகம் காண்கிறேன்
என் விடியல் வந்ததும்
மீண்டும் உன்னையே
தேடுவேன்
அழகிய அரக்கியே -பலருக்கு நீயே
முதல் காதலி!!