சிவனா சிலையா

பறந்து விரிந்த பால் வெளியில்
வழியறியா நிற்கையிலே
விண்கல்லொன்று என் விழியருகே
சீறிச் செல்கயில் என் உயிர்
என்னிடம் சொல்லாமல்
உயரச்சென்று திரும்பி வந்ததே
கோடி விண்மீன்கள் ஒன்று போல
கூடி என்னைப் பார்க்க
குழம்பி நின்றேன் சில நொடிகள்
புலம்பி நின்றேன் சில நொடிகள்
மறுமுறை சிந்தையில் ஒரு
எண்ணம் வருமுன்னே
நின்ற இடம் தூக்கி எரிந்தது
நில்லாமல் வேறொரு
இடத்தில் விழுந்தேன்
அதுவும் நான் அறியா இடமே
நீரில்லை சோரில்லை
நினைவுகளும் இல்லை
உறவுகளும் இல்லை
அவை தரும் உணர்வுகள் இல்லை
விடையில்லா வினாக்கள்
மட்டும் தடையின்றி
என்னுள்.
தூரமாய் ஒளியொன்று
என் மேல் வீச
மெல்லிய குரலில்
நானும் பேச
எதிரொலித்த ஒளி
என்ன வேண்டும் என்றுக் கேட்டது.
எங்கு நிற்கிறேன்?
கதைக்கும் நீ யார்?
கண் அருகே
நூறு சூரியன்
கூட்டமாய் நின்றும்
குளிர்வது ஏன்?
என வித விதமாய்
கேள்விகள் தயார்..
கேட்பதுற்குள் ஒளி
சிரித்துவிட்டு சொன்னது
உலகெல்லாம் தேடிடும்
என்னை யாரென்று
கேட்கிறாய், சரி
சிலர் சிவமென்பர்
சிலர் சிலையென்பர்
நான் யாரென்று
தெரிந்தால் மீண்டும்
உறங்கும் முன்
என் பெயர் சொல்லிடு
எனச் சொல்லி மறைந்தது
அத்துடன் என் துயில்
கலைந்தது

எழுதியவர் : நிரஞ்சன் (11-Jan-21, 10:19 am)
சேர்த்தது : நிரஞ்சன் பாபு
பார்வை : 29

மேலே