இருள்தான் சூழ்ந்து விட்டால் உன் நிழல் கூட துணை இல்லை

*

கண்ணா எழுந்து வா
கண்மணி நீ எழுந்து வா
மண்ணிலுன் பொற்பாதம்

பதித்திட நீ எழுந்து வா.


வென்றிட எழுந்து வா

பொன்நடை நீ இட்டு வா
வாழப்போகும் பூமியிலே


வழித்தடம் நீ பதித்து வா.


தோல்விகள் உனக்கு இல்லை
தோல்விக்காக பயக்காதே
கருவாக வென்ற நீ

வென்றிடுவாய் நடை போடு.


தத்தித்தத்தி நடந்து வா
மெதுமெதுவாய் உணர்ந்து வா

கருவானாய்
உருவானாய்


அதன்பின்பு நீ பிறந்தாய்
மண்ணுலகில் அடிவைக்க


பார் உலகை உணர்ந்து வா


யாருமுன்னை பிடிக்க மாட்டார்
தானாக நடைபோடு
தாயுறவும் பார்த்தாய் நீ

பிறந்தவுடன் அறுத்திடுவார்.


யாரும் உன்னை தூக்க மாட்டார்
துணிவாக நடைபோடு
தனியாய் வந்த நீ
தனியாய் போகும் நீ
எப்பொழுதும் நினைவில் கொள்
இருள்தான் சூழ்ந்து விட்டால்

உன் நிழல் கூட துணை இல்லை


இருட்டும் உனக்கு புதிதில்லை
ராப்பொழுது பயக்காதே
தாய் வயிற்றில் வளர்ந்ததை நீ

எண்ணிக்கொண்டு கடந்து விடு.


உலகை நீ பார்க்க
எண் ஒரு கண்ணாகும்
எழுத்து மறு கண்ணாகும்
இரண்டையும் காத்து வா

கல்விச் செல்வம் அடைந்து வா


நிலைத்து நீ வாந்திடவே

பண்பு ஒரு கண்ணாகும்
கருணை ஒரு கண்ணாகும்


அன்பு கொண்டு பேணி வா
இன்னுலகில் நிலைக்க வா


வென்றால் மயங்காதே

ஆணவத்தில் நடக்காதே
தாய் வயிற்றில் இருந்தது போல்


அடக்கமாக இருந்து விடு
பெரிதாய் வளர்ந்திடுவாய்


முழு பிறப்பு எடுத்திடுவாய்.


புகழுக்குப் பணியாதே

புகழ்பவரை நம்பாதே
பரமபத விளையாட்டில்
பாம்பு விழுங்கும் கதையாகும்.

எதிர்பாரா நேரத்திலே
தீக்குழியில் தள்ளிடுவார்


உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தாய் தந்தை போற்றி நில்
மூத்தோரை வணங்கி நில்


உறவோடு பழகி நில்
துணையோடு நெருங்கி நில்

வந்தவரை காத்து நில்

உலகோடு பகிர்ந்து கொள்


கண்ணா ஓடி வா

கண்மணி நீ ஓடி வா
உலகை காக்க வா
புது உலகம் படைக்க வா




************************************

எழுதியவர் : Golden Vibes (26-Nov-24, 8:14 pm)
பார்வை : 62

மேலே