நான்கடியும் முதற்சீரில் வந்து சேரும் வாய்ப்பாடு - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 5 சீரில் மோனை)
காய்ச்சீரில் தொடங்குகின்ற விருத்தங்கள்
..நான்கடியுங் கவன மாக
வாய்விட்டுச் சொல்லிப்பார் நான்கடியும்
..முதற்சீரில் வந்து சேரும்
வாய்ப்பாடும் ஓர்வகையாய் நன்றமைந்தால்
..இனிதாகும் வகையாய்ச் சொன்னேன்
தேய்மான மேதுமின்றித் தேர்ந்தெடுத்தே
..வைத்திடுவீர் திறமாய்ச் சீரை!
- பாவலர் மணி வ.க.கன்னியப்பன்