ஐயோ போதும்பா

காதுல போட்டிருக்கே தோடு. தொலைஞ்சு போனா, தேடு!

தலைல முடி இருந்தா சீப்பு
மொட்டை என்றால் சோப்பு!

பல் பிடுங்க பல் மருத்துவர்
பணம் பிடுங்க பல மருத்துவர்

பணம் இருந்தால் எதுவானாலும் வாங்கலாம்
குணம் இருந்தால் குணம் மட்டுமே வாங்கலாம்

பசி மிஞ்சினால் சாப்பாடு
பணம் மிஞ்சினால் கூப்பாடு

தூக்கத்தில் கனவு வரும்
கனவில் தூக்கம் வருமா?

பனை மரத்திலிருந்து கள் எடுக்கலாம்
கள்ளிலிருந்து பனை மரம் எடுக்க முடியுமோ?

எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் இவன் அஞ்சாநெஞ்சன்
இவனுக்கு தலைவலி வந்துவிட்டாலோ அமிர்தாஞ்சன்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (26-Nov-24, 4:29 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : ayyo pothumbaa
பார்வை : 51

சிறந்த நகைச்சுவைகள்

மேலே