வடக்கே போகும் ரயில்

அடுத்தது என்ன ஸ்டேஷன்?
ரயில்வே ஸ்டேஷன்
&&&
இந்த வண்டி திருச்சிக்கு எப்போ போகும்?
அது வண்டியை ஓட்டுற டிரைவரை பொறுத்து இருக்கிறது.
&&&
ஏன், ரயில் ரொம்ப நேரமா சிக்னல் கிடைக்காம நிக்குது?
ரயில் வண்டிக்கு ஒரு சீட் போட்டு கொடுத்தாதானே அது உட்கார முடியும்.
&&&
பிரயாணி 1: என்ன ரொம்ப ஆச்சரியமாக இருக்கு! 7 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், இன்னிக்கு 6.30 மணிக்கே புறப்பட்டு விட்டது.
பிரயாணி 2: நீங்கள் எந்த ஊருக்கு போகணும்?
பிரயாணி 1: ஏன், மும்பை தான்
பிரயாணி 2: அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிக்கிங்க. இந்த வண்டி ஹைதராபாத் போகுது.
&&&
ரயில் பயணம் செய்கையில் நாம் கண்டு கொள்ளாமல் இருக்கும் இரண்டு முக்கிய நபர்கள் யார் தெரியுமா?
ரயில் ஓட்டும் டிரைவர், சிக்னல் கொடுக்கும் கார்ட்.
நெட்டை மனிதன்: யோவ், ஆளு ரெண்டு அடிதான் இருக்கே. ஆனால் உனக்கு ஆறு பெரிய சூட் கேஸ். நாங்கள் எல்லாம் சூட் தேவை எங்கே வைக்கிறது?
குட்டையன் (அண்ணார்ந்து அவரை பார்த்தபடி) கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்க ஐயா. எனக்கு மட்டும்தான் டிக்கெட் இருக்கு. பணம் கொஞ்சம் குறைவாக இருப்பதால், என் மூணு மனைவிகளும், மூணு குழந்தைகளும், சூட் கேஸ் உள்ளேயே சீட்டும் பர்த்தும் போட்டுக்கிட்டாங்க.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Nov-24, 8:55 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 3

சிறந்த நகைச்சுவைகள்

மேலே