வரவழைத்தேன்

குடிப்பதில் இருக்கும் துன்பம் வேறில்லை...
குடிப்பதை விரும்பாதவன் பலரில்லை...
குடிப்பவன் சொல்வான் வேதமில்லை..
குடித்ததால் அவன் பேசுவது நியாயமில்லை ....

அவன் பிறந்ததை நினைத்து குடிப்பான்..
அடுத்தவன் இறந்தால் குடிப்பான்...
கூட்டு சேர்ந்தால் குடிப்பான் ...
கூடு பிரிந்தால் குடிப்பான்...

எல்லையில் இருந்தாலும் குடிப்பான்...
எல்லை மீறவும் குடிப்பான்...
எலும்புகள் உருகும் வரை குடிப்பான்..
எறும்புகள் உடம்பில் ஊறுவது தெரியாமல் குடிப்பான் ...

இதயம் தொலைத்தவன் குடிப்பான்..
இதயத்தை தேடுபவனும் குடிப்பான்..
இதயம் நிற்கும் வரை குடிப்பான்.
இதயங்கள் உடையும் வரை குடிப்பான்..

வாழ்க்கை வெற்றியென்றால் குடிப்பான்..
வாழ்வில் தொல்விஎன்றால் குடிப்பான்...
வஞ்சனை செய்பவனும் குடிப்பான்..
வாழ வழியில்லாதவனும் குடிப்பான்...

தலைவன் வெற்றிபெற்றால் குடிப்பான்..
தலைவன் தொல்விபெற்றால் குடிப்பான்..
தங்கை வாழ்க்கை இழந்தால் குடிப்பான்..
தங்கைக்கு தங்கம் சேர்க்க முடியவில்லையே என்று குடிப்பான்..

தவமாய் பெற்றது நல்ல வழி தவறினால் குடிப்பான்..
பெற்றவன் குடிப்பதால் பிள்ளையும் குடிப்பான்..
பெற்றதை நினைத்தும் குடிப்பான்...
பெற்றுவிட மாட்டுமா பிள்ளையை என்று நினைத்தும் குடிப்பான்,,,

25 லும் குடிப்பான்...
75 லும் குடிப்பான்...
முடி உதிர்ந்தாலும் குடிப்பான்...
முடிவு நெருங்குவது தெரியாமல் குடிப்பான்....

குடித்தவன் இடத்தில் நானும் இருந்தேன் ...
குறிப்பிட்ட அனைத்தும் நானும் கண்டேன்..
குற்றம் சொல்வது எனது எண்ணம் இல்லை..
நானும் குடித்ததால் அதை நான் சொல்வதில் நியாயமும் இல்லை....

உண்மை உன்னிடம் சொல்கிறேன் நண்பா....
இதயம் இருந்தால் கேட்டு செல் நண்பா...
குடிப்பதை அவள் அவர் அவர்கள் விரும்பவில்லை..
குடிப்பதை நானும் நிறுத்தவில்லை...

குழந்தை போல் தினமும் எடுத்து சொன்னால்..
கோபம் ஒன்றும் இல்லாமல் சொன்னால்...
சொன்னது எனக்கு புரியவில்லை...
நான் குழந்தை இல்லை என்பதால் அது எனக்கு புரியவில்லை..

இதயம் தேடி அலைகிறேன் புரியவைக்க முயல்கிறேன்..
இயற்க்கையோடோ இணைந்து விட்டேன் மரணம் என்னும் காற்றோடு ...
இனி எப்படி சொல்லி உன்னிடம் புரியவைப்பேன்...
உருவம் தொலைத்தேன் என் உடலை நானே எரித்தேன்...

உயிரே உன்னைவிட்டு பிரித்தது இந்த குடி....
அழகிய என் உருவத்தை எரிக்கவைத்ததிந்த குடி ...
அழகே உன்னுடன் வாழ முடியாமல் செய்தது இந்த குடி...
குடியில் தினமும் முழ்கீருந்த என்னை மூழ் கடித்தது இந்த குடி..

குடியில் மூழ்கின போது இன்பம் என நினைத்தேன்...
இன்பம் என நினைத்ததால் என் குடி மூழ்குவதை காணாமலே சென்றேன்..
நீச்சல் தெரியும் தப்பிவிடலாம் என நினைத்தேன்...
கடலில் வீழ்ந்தது நீச்சல் தெரியாத என் குடும்பம் என்பதை மறந்தேன்...

குடிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை...
அது எனக்கு தகுதியும் இல்லை...
குடிப்பவர்களுக்கு எடுத்து சொல்ல குறைவு இல்லை ...
அப்படியும் குடிப்பதை நிறுத்துபவர்கள் இல்லை...

குடித்ததால் வாழ்வில் நீ சாதித்திருந்தால் குடி...
குடித்ததால் நல்ல வாழ்வு கிடைக்கும் என்றால் குடி...
குடித்ததால் சமூகத்தில் நல்ல மதிப்பு என்றால் குடி..
குடித்ததால் மனைவி மக்கள் சந்தோஷப்படுவார் என்றால் குடி...

குடித்ததால் குடும்பம் நஷ்ட்டப்படவில்லை என்பவன் குடிக்கட்டும்..
குடித்ததால் மகிழ்ச்சியை தொலைகாதவன் உண்டென்றால் குடிக்கட்டும் ...
குடித்ததால் நல்ல மதிப்பை இழந்தவன் இல்லை என்றால் குடிக்கட்டும்...
குடித்ததால் சமூகம் உன்னை தலை வணங்குகிரதேன்றால் குடிக்கட்டும்..

குடித்ததால் உயிரை எடுத்தவன் உண்டு ...
குடித்ததால் வாழ்க்கை தொலைத்தவன் உண்டு...
குடித்ததால் மனைவி மக்களை கைவிட்டவன் உண்டு...
குடித்ததால் தன் சுய மரியாதையை இழந்தவன் உண்டு...


குடிப்பவனே உனக்காய் காத்திருக்கிறேன்...
உன் குடியை நீ மூழ்கடித்து வரும் நாளை மரண வாயில் நின்று .
வரவேற்க மாலையுடன் தினம் காத்திருக்கிறேன் ...
உன்னைப்போல் நானும் குடித்ததால்...
உனக்கு முன் மூத்த குடிமகனாகிறேன்...மரண வாயிலில் ..

மரணத்தை குடி குடித்து நானே வர வழைத்ததால் .....
மரணம் வந்தழைத்து போகும் வேலையில் ...
குடியை விட்டுவிட்டேன் ...மரணம் என்னை விடவில்லை...

எழுதியவர் : samuel (7-Oct-15, 9:23 am)
பார்வை : 158

மேலே