முதல் உறவு

" முதல் உறவு "

தமிழுருவாய் உன்னை நான் பாடவா
எனதுணர்வாய் உன்னை நான் கூடவா

சொந்தம் இனி நானோ மஞ்சம் இனி நீயோ
சொர்க்கம் இது வீணோ தர்க்கம் இறை தானோ
ஏனோ நான் உன் பார்வை பாட
வான் நீயோ

நீ... முதல் உறவு அதாய்
ஒளி விதையோ
ஒலி அதிசயமோ
கவி பிறப்போ

அழகு சுவை உன்னை பருகிடவே
அமுது விரைந்து உன்னை நெருங்கிடுமே

வந்த பெண் இறை தானோ நீ
தீர்ந்த என் பசி தீராததோ
ஆய்ந்த என் பிணி ஆறாததோ

புவிமத இறையை வெறுத்து தான்
கவிஉனை உணர்வாய் விரும்பி நான்
ஏனோ தானோ என்று பாடுவேனோ...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (7-Oct-15, 8:22 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : muthal uravu
பார்வை : 156

மேலே