மீண்டும் மீண்டும் -போட்டிக் கவிதை ---முஹம்மத் ஸர்பான்

கருவறை சுவருக்குள்
மீண்டுமோர் ஜென்மம்
வேண்டும்.
தாய் உமிழ் பட்ட அன்னத்தை
இரைப்பைக்குள் மீண்டும்
திருடி உண்ண வேண்டும்.

நிழலில் விழுந்து
உலகின் கண்ணாடியில்
என்னை மீண்டும்
உடைக்க வேண்டும்.
உள்ளம் என்ற
புதைகுழியை தூய்மை
எனும் சலவை செய்து
மீண்டும் உலகில்
போராளி வழிப்போக்கனாக
பயணிக்க வேண்டும்.

குன்றும் மண்ணாய்
குழைவதை போல்
கண்ணில் நல்லதாய்
புகுத்தி மீண்டும்
பாவத்தை அளிக்க வேண்டும்.
காதல் என்ற சொல்லில்
மீண்டும் என்னை தொலைத்து
தூரத்தில் உனக்காய்
கவிஞனாய் வாழ வேண்டும்.

எழுதி எழுதி கிழியும்
காகிதம் போல்
புழுதி படிந்த வழியில்
மீண்டும் நட்சத்திரம்
அடுக்க வேண்டும்.
மலரை கற்பழிக்கும் காற்றை
வேருக்குள் சுவாசமாய்
மீண்டும் நுழைத்திட வேண்டும்.

உண்ணும் உணவில் மீண்டும்
இல்லாதவனை ஒரு முறை
காரணமின்றி நினைக்க வேண்டும்
இந்த உலகம் போல.....,
நான் போகும் பாதையில் கல்லடி
பட்டு முள் நிறைந்த கள்ளி போல்
மீண்டும் மீண்டும் பாலை நிலத்தில்
முளைக்க வேண்டும்.
உலகின் முகத்தில் என் கோபக் கற்களை
மீண்டும் மீண்டும் எரிந்திட வேண்டும்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (16-Nov-15, 11:50 am)
பார்வை : 110

மேலே