திருப்பூர் கனகசிவா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : திருப்பூர் கனகசிவா |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 11-Jun-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 637 |
புள்ளி | : 114 |
தந்தை ,தாய் -பெயர் - வெ.கனகராஜ் ,கலைச்செல்வி பிறந்தது - பாண்டிச்சேரி எனது இயற்பெயர் (க.சதாசிவம் ) கவிதை மற்றும் கட்டுரை எழுதுவது ..தற்போது ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறேன் .கொடி காத்த குமரன் ஊரில் ,துணைவி பெயர் - பூங்கொடி மகள்கள் பெயர் - கோகிலஇலக்கியா , தமிழரசி....(குறிப்பு ) எனது மனதை பாதிக்கும் விடையங்களை கொட்டி தீர்த்து எழுதிவிடுவேன் .இதுவே ----நான்.......
'சிந்திப்பதற்கு ஒரு 'சீராட்டு //
'' சிதைந்து கிடக்கும் மனிதா இதனை
சிந்தி உனக்கு
சிறு மூளையும் பணியாற்றும் ,
'' சிந்தனையை தூண்டு
சிதற விடாதே
சீர்த்திருத்தத்தை கொண்டுவா
சிரமப்படாதே
சிறியவர் இடத்தில் அன்பு செலுத்து
சிருமைக்கொல்லாதே - உனது
சித்தாந்தத்தை (கொள்கையை )
சீர்படுத்து இதனால் பிறரை
சிரிக்க விடாதே //
'' சிறுவர்களின்
சிந்தனையை கேளுங்கள்
சீரு பாம்பை கூட அனுபவமில்லா
சிந்தை கொண்டு கையிலெடுத்து
சீராட்டுவான் இந்த
சிறுவன்
சிறகடிக்கும் பறவையாய் பறக்க
சிந்திப்பான் இந்த
சிறுவன்
சில்லறைக் காசைக்கூட
சிருசேமிப்பின்
'' திருநங்கை //
'' சமூகத்தின் அவலம் என எண்ணாதீர்கள் ,
சமூகத்தின் அவலம் என எண்ணாதீர்கள் ,,//
'' ஆணாக்கி பெண்ணாகி புண்ணாக்கி விட்டது
எங்கள் வாழ்வு ,,//
'' குரல் வளத்தில் இந்திரனாக்கி, உடல் வளத்தில்
ரம்பையாக்கி ஓர் இரவில் அறுக்கப்பட்டன
எங்கள் வாழ்வு ,,//
'' உலகில் ஆண்சாதி , பெண்சாதி இரண்டுமட்டுமே
உள்ளபோது ,என்சாதியே முன்சாதி என்று யாரிடம்
போய் முறையிடுவது ,,//
'' சேலை கட்டிய சோலைவனமாய் , நந்தவனத்தில்
நான் வந்தால் வெந்துபோன வார்த்தைகளாய்
நொந்துக்கொள்ள வைக்காதீர் ,,//
'' சிவன் பாதி சக்தி பாதி எனவாக்கி பத்தில் ஒன்றைக்
கழித்து மீதியாக்கி விட்டான் சில மனிதன் ,,//
''
'' வாழ்த்து மடல் //
' மனம் - என்ற சிந்தனைக்கொண்டு ,
மகிழ்ச்சியை வரவளியுங்கள் //
' தனம் - என்ற செல்வத்தால் ,
வாழ்க்கையை மேம்படுத்துங்கள் //
' நலம் - என்ற ஆரோக்கியத்தை ,
வளர்த்துக் கொள்ளுங்கள் //
' பாசம் - என்ற நடப்பால் ,
வீட்டினுள் உலாவாருங்கள் //
' காலம் - என்ற பெட்டகத்தை ,
திருப்பிப் பாருங்கள் //
' நன்றி - என்ற சொற்களால் ,
நான் உங்களை வாழ்த்துகிறேன் //
' சுபம் - என்ற மூன்று எழுத்தை எப்பொழுதும் ,
நான் தங்களிடத்தில் எதிர்ப்பார்க்கிறேன் //
' மூன்று - முடிச்சியிட ,
'' தொழிலாளியின் தலைவலி //
'' ஆம் இது தொழிலாளர் தினம் அல்ல ,
தொழிலை ஆளுபவர் தினம் //
'' ஆம் இது உழைப்பாளர் தினம் அல்ல ,
நம் உழைப்பை ஆளுபவர் தினம் //
'' உழைப்பிற்கும் மனிதன் களைப்பிற்கும்,
வேறுபாடு அறியாதவன் - சில எசமான் //
'' எட்டு மணி நேரப் பணியை ,
எட்டாக் கனியாக்கியவன் - சில எசமான் //
'' உரிமை ,திறமை ,எனச்சொல்லி ,
நம்மை அடிமை -படுத்தியே வைத்துள்ளான் - சில எசமான் //
'' எப்பொழுது தீரும் இந்த உழைப்பாளியின் களைப்பு //
'' எப்பொழுது தீரும் இந்த தொழிலாளியின் தலைவலி //
'' எப்பொழுது தீரும் இந்த எசமான்களின் விசமம்,விசமம்,விசமம் ,,,,,
ஆதங்கத்துடன் உங்கள் சிவகவி ,,,,,,
[ முன்குறிப்பு: தோழர் குமரேசன் கிருஷ்ணன் மகள் வரைந்த ஓவியத்தை பதிவிட்டு இருந்தார். அந்த ஓவியத்தில் உள்ள மரம் என்னிடம் பேசுவதாக தோன்றியது. அதை பார்த்து நான் எழுதிய கவிதை. இது அந்த சிறு குழந்தையின் ஓவியத்திற்கே சமர்ப்பணம் செய்கிறேன்.. ]
நான்
என்மேல் கல்லெறிந்தவனுக்கும்
கனி கொடுக்க தவறியதில்லை...
எந்த
பறவைகளிடமும்
பாரபட்சம் பார்த்ததில்லை...
எப்போதும்
நிற பேதமை பார்த்து
நிழல் கொடுத்ததில்லை...
சுவாசத்தை சுத்தப் படுத்தியதில்
சம பங்கு உண்டு எனக்கு
இருப்பினும்
விசுவாசத்தை எதிர் பார்க்கமுடியுமா
வெட்ட துணிந்தவர்களிடம்?
வெட்டுங்கள் என்னை
ஆனால்
என்மேல் கூடு கட்டி
குடியிர
'' நின்று படியுங்கள் - ' எங்கே சுதந்திரம் //
'' மதக்கலவரத்தை மற்றவனா - கொண்டு வந்தான் ,
இந்த மண்ணின் மைந்தந்தானே //
'' வரதட்சணை கொடுமையை -வந்தவனா கொண்டுவந்தான் ,
இங்கு வாழ்ந்தவந்தானே //
'' அரசியல் ஊழல்கலை ஊரானா - கற்றுக்கொடுத்தான் ,
உள்ளூர் காரன்தானே //
''அராஜகத்தை கொண்டு வந்தவன் - அந்நியனா ? இல்லையே ,
உன் அயலான் தானே //
'' பெண்ணடிமையை பெண்டிங் பிரபுவா - கொண்டு வந்தான் ,
உள்ளூர் பேடிகள் தானே //
'' கள்ளச்சாரயத்தை கடல் கடந்தா - கொண்டுவந்தான் ,
உள்ளூர் கயவர்கள் தானே //
'' ஏன் பொய் சொல்கிறாய் - முன்னூரு(300) ஆண்டுகள் ,
அந்நியனிடம் அடிமையாய் இருந்தோம் என்று //
'' ஆயி
'' நின்று படியுங்கள் - ' எங்கே சுதந்திரம் //
'' மதக்கலவரத்தை மற்றவனா - கொண்டு வந்தான் ,
இந்த மண்ணின் மைந்தந்தானே //
'' வரதட்சணை கொடுமையை -வந்தவனா கொண்டுவந்தான் ,
இங்கு வாழ்ந்தவந்தானே //
'' அரசியல் ஊழல்கலை ஊரானா - கற்றுக்கொடுத்தான் ,
உள்ளூர் காரன்தானே //
''அராஜகத்தை கொண்டு வந்தவன் - அந்நியனா ? இல்லையே ,
உன் அயலான் தானே //
'' பெண்ணடிமையை பெண்டிங் பிரபுவா - கொண்டு வந்தான் ,
உள்ளூர் பேடிகள் தானே //
'' கள்ளச்சாரயத்தை கடல் கடந்தா - கொண்டுவந்தான் ,
உள்ளூர் கயவர்கள் தானே //
'' ஏன் பொய் சொல்கிறாய் - முன்னூரு(300) ஆண்டுகள் ,
அந்நியனிடம் அடிமையாய் இருந்தோம் என்று //
'' ஆயி
முன்னுரை
கல்வி என்றால் என்ன???? ஒருவரின் ஆளுமைத்திறனை வெளிக்கொணர கடவுள் மனிதனுக்கு தந்த வரம் ஆகும்….அதை நாம் பள்ளி என்னும் கோவிலில் மட்டுமே பெறமுடியும்….ஏன் பள்ளியை கோவிலுக்கு ஒப்பிடுகின்றோம்…காரணம் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்க கூடிய இடம் பள்ளி மட்டுமே…. பள்ளி ஏடும் எழுத்தும் மட்டும் அறியும் இடமில்லை நாம் யாரென்று நம்மை அடையாளம் காட்டும் ஒரு கோவில்.... மனிதனை மகானாக்குவதும் இந்த பள்ளிக்கூடமே... ஆனால் தற்பொழுது அந்த கோவில் பல பிரிவினைக்கு (அரசினர் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என )ஆளாகி அதன் தனித்துவத்தை இழக்க ஆரம்பித்துவிட்டன…..அவற்றைப் பற்றிக் காண்போம்…..
பள்ளிகளின
'' பண்புகள் வளரட்டும் !!
ப - க்கங்களை புரட்டிப்பார் நாடாடியோரின் ,
பா - டங்களை கற்றுக்கொள்வாய்,
பி - ஞ்சுகளின் நெஞ்சத்தை கிள்ளாதே இவர்கள் ,
பீ - தி அடைவதற்கு நீ காரணமா இராதே ,
பு - ன்னியம் செய்தவனாக இருந்திருக்க வேண்டும் ,
பூ - லோகத்தில் ஆட்சிபுரிய ,
பெ - ற்ற சுதந்திரத்தை ,
பே - ணிக்காக்க வேண்டும் ,
பை - பில் , குரான் , பகவத்கீதை ,இவை முன்றும் ,
பொ - றுமைக்கே உதாரணமான அன்பை ,
போ - ற்றி புகழ்ந்திருக்கிறது என்பதனை மறவாதே இவைகள் ,
பௌ - னிவர முக்கடவுளையும் ரட்சித்து ,
ப் - ரவேசிப்போமாக!!!!!!!!
'' தமிழ் ''
" ஆம் எம்மொழியும் நம் மொழியாய் நன்மொழி என பழகு !! -பின் , நம் மொழியே திண் மொழி என செம்மொழி இனம் என உணர்த்தும் உலகு !!
'' அமுது தமிழ் ''
''அ '' - அறம் எங்கும் தலைத்தோன்கட்டும் ...
'' ஆ'' - ஆணவம் அனைத்திலும் தரம் கெடட்டும் ...
'' இ '' - இன்பம் எதிலும் பெருகட்டும் ...
'' ஈ '' - ஈதல் செய்து தர்மம் நிலைக்கட்டும் ...
'' உ '' - உறுதி எதிலும் பலம் பெறட்டும் ...
'' ஊ '' - ஊற்று எப்பவும் நன்னீராகட்டும் ...
'' எ '' - எதார்த்தம் எதிலும் நிலைக்கட்டும் ...
'' ஏ '' - ஏற்றம் எங்கும் வளரட்டும்...
'' ஐ '' - ஐந்து பூதங்கலும் உலகின் நன்மை பெயர்க்கட்டும் ...
'' ஒ '' - ஒற்றுமை எங (...)