திருநங்கை

'' திருநங்கை //

'' சமூகத்தின் அவலம் என எண்ணாதீர்கள் ,
சமூகத்தின் அவலம் என எண்ணாதீர்கள் ,,//

'' ஆணாக்கி பெண்ணாகி புண்ணாக்கி விட்டது
எங்கள் வாழ்வு ,,//

'' குரல் வளத்தில் இந்திரனாக்கி, உடல் வளத்தில்
ரம்பையாக்கி ஓர் இரவில் அறுக்கப்பட்டன
எங்கள் வாழ்வு ,,//

'' உலகில் ஆண்சாதி , பெண்சாதி இரண்டுமட்டுமே
உள்ளபோது ,என்சாதியே முன்சாதி என்று யாரிடம்
போய் முறையிடுவது ,,//

'' சேலை கட்டிய சோலைவனமாய் , நந்தவனத்தில்
நான் வந்தால் வெந்துபோன வார்த்தைகளாய்
நொந்துக்கொள்ள வைக்காதீர் ,,//

'' சிவன் பாதி சக்தி பாதி எனவாக்கி பத்தில் ஒன்றைக்
கழித்து மீதியாக்கி விட்டான் சில மனிதன் ,,//

'' திரு என்றால் ஆண்மகன் நங்கை என்றால் பெண்மகள்
என ஒன்றிணைத்து எங்களை திருநங்கை - என பெயர்
சூட்டிய அந்த மா -மனிதனுக்கு எங்களுடைய
மனமார்ந்த வாழ்த்துக்கள் ,,//

எழுதியவர் : சிவகவி - திருப்பூர் சிவா (3-Oct-15, 5:11 pm)
Tanglish : thirunangai
பார்வை : 229

மேலே