கனவு மெய்பட வேண்டும்

தாயின் கருவறையை போல் உலகில் அமைதியான
இடம் இல்லை
நம்மை பற்றியே
சிந்திக்கும் இதயத்தின் அருகில்
அழகான சங்கீதம்
வளையலினில் சிலுங்கலால் எழும்ப
இரவு பகல் இல்லை
அந்நேரத்தில்,
நமக்கும் நம்தாய்கும்.
நாம் இருளில் மட்டுமே
வாழ்கிறோம்
அவள்
இருளில் கூட நமக்காக விழிக்கிறாள்
பாதுகாப்பு வளைகாப்புக்கு பிறகு மும்முர படுத்த படுகிறது
தெய்த்தின் அறையும்
கருவறை தான்
நாம் இப்போது
இருப்பதும் கருவறை
தான்
அதனால் தான் அன்னை ஒர் ஆலயம் என்கிறாரோ?
எனக்கு பிடித்த நிறம்
எனக்கு பிடித்த
உடை
எனக்கு பிடித்த
உண்
எனக்கு பிடித்த
யாவும் உனக்கு
பிடிக்கும்
எந்நேரத்திலும்
உனக்கு பிடித்த ஒன்றும் எனக்கு பிடிக்கவில்லையே
என்னை கூட,
நான் வாழும் இந்த உலகம் பிடிக்கவில்லை
எனக்கும் எல்லா மனிதரை போல்
பழைய நினைவுகள்
ஏக்கங்களாய் மாறுகிறது
மீண்டும் செல்ல வேண்டும்
கருவறைக்கு
விளையாட ஆள் இல்லாமல் உன்னிடம் சண்டை பிடிக்கவேண்டும்
உன்னை உதைக்க வேண்டும்
என் வாசம் முழுதும்
உன் சுவாசம் வேண்டும்
உன் உதிரத்தில் நான் உரைய வேண்டும்
உன் உண்ணில்
என் ஊன்
வளர்க்க வேண்டும்
உன் தாலாட்டில் நான் உறங்க வேண்டும்
மீண்டும் உன் கருவறையில் வாழ வரம் வேண்டும்
~சிவ சூர்யா

எழுதியவர் : சிவ சூர்யா (4-Oct-15, 2:00 pm)
பார்வை : 211

மேலே