அம்மா

அம்மா நீ இல்லையேல் நான் இல்லை

உன் மனம் என்னும் கோயிலில் எனை தாங்கினாய்
உன் முகம் மலர மலர எனை அன்போடு வளர்த்தாய்

கண்ணின் இமை போல் எனை காத்திட்டாய்
கண் இமைக்காமல் என் நலம் வேண்டினாய்

மண்ணில் நீ வாழ்ந்த வரை எனக்கு துணை நின்றாய்
மண்ணிலே நான் இருக்கும் வரை வாழ வழி வகுத்தாய்

சொல்லாலே எனை நீ வருத்தியதும் இல்லை
சொல்லாலே நான் உன்னை போற்றியதும் இல்லை

குற்றமாய் நீ யாரையும் சொன்னதில்லை
குற்றம் செய்தவரை என்றும் மன்னிக்க மறுத்ததில்லை

நீ பூமியில் இருக்கும் வரை நான் உனக்காக அழுததில்லை
நீ விட்டு பிரிந்த வுடன் அழாமல் இருந்ததில்லை

பொறுமைக்கு உவமை நீதானோ
பொறுத்த தெல்லாம் போதும் என சென்றுவிட்டாயோ

உன் நினைவில் உன் நினைவில்.....

திருமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : திருமதி. மைதிலி ராம்ஜி (4-Oct-15, 4:52 pm)
Tanglish : amma
பார்வை : 724

மேலே