அம்மா உனக்கு

என் அம்மாவிற்கு என் சமர்ப்பணம்

நான் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு பாடல்...

தாயே!!!! உன் பாதங்களை தொட்டு வணங்கினாலும் போதாது
வாழ்நாள் முழுதும் சேவை செய்திருப்பின் தீராது

உன் உதிரத்தில் எனை ஆளாக்கினாய்
என் உதிரம் அனைத்தும் உனக்கு சொந்தம்

உன்னை நினைத்து நினைத்து தவிக்காத நாளில்லை
நீ வருவாயோ! வருவாயோ! என்ற ஏக்கமும் தீரவில்லை

நீ சென்ற இடம் யாவிலும் சென்று சென்று தேடுகின்றேன்......
ஆனால் ஓரிடத்திலும் உன் உருவம் நிலையாய் இருக்கவில்லை....

இன்னமும் தேடுகின்றேன்......


திருமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : திருமதி மைதிலி ராம்ஜி (5-Oct-15, 10:08 am)
Tanglish : thaayin uthiram
பார்வை : 204

மேலே