ஸ்ரீனிவாசன் அம்சவேணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஸ்ரீனிவாசன் அம்சவேணி |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 28-Oct-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 387 |
புள்ளி | : 44 |
நீங்கள் என்னவென்று என்னை நினைத்தீர்களோ அதுவே நான்,உங்களுக்கு மட்டும் ....
சற்று குளிர்ந்த காற்றில் வெப்பம் கலந்து வர...
நிசப்தமான இரவில் சற்று காதலும் காமமும் விளையாட.. இருவரிடையே இடைவெளி இல்லாத அந்த நேரத்தில்..
மனமே அறியாத தருணத்தில் குளிரில் சூடான வெப்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று காத்திருக்கும் அந்த நேரம் .. சற்று
உணர்வுகள் எல்லாம் தூண்ட பட்டு ..
வெட்கத்தில் முகம் மலர ..
விலகி ஓட வைக்கும் கூச்சம் கொண்ட அந்த நேரம்..
என் தனிமைக்கான நேரம்.
பெருமூச்சின் நிஷப்தங்களை
பின்னிக் கிடக்கும்
ஏதேன் காட்டுக்குள்
மீண்டும் கடவுள்
கொல்வோம்...!
-----------------------------------------------
குளிருக்கு கை நீட்டுகிறாய்...
நெருப்புக்கும்
உன் நளினம்...
-------------------------------------------------
எல்லா கோடிட்ட
இடத்திலும் உன் பெயரே
நிரப்புகிறேன்...
-----------------------------------------------
நிலைக் கண்ணாடி
அசைகிறது
சிமிட்டுவதை நிறுத்து...
-------------------------------------------------
எல்லாத் தெருவுக்கும்
ஒரு வீடு அடையாளம்...
உன் வீட்டுக்குத்தான்
தெருவே அடையாளம்...
-----------------------------
ஊடலும் கூடலும்----கயல்விழி
எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.
காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.
என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்
உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.
போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.
ஆனால்
தயவு செய்து
"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண
தனிமையின் தவிப்புகள்--கயல்விழி
கருவில் சுமந்தவளே-என் கண்ணீரை பார்
அன்னையின் மடியில்
ஆசையாய் பிள்ளைகள்
உறங்கும் போது
இதோ
இவள் மட்டும்
தனிமையில் தாய் மடி
தேடியபடி
உன் கரங்களில் கொடுக்கும்
ஒரு பிடி சோறு-உன்
இதழ்கள் பதிக்கும் ஒரே ஒரு
நெற்றி முத்தம்
இவைகளுக்காய்
ஏக்கங்களுடன் இதோ உன்
மகள்.
அறிவாயா தாயே
தனிமை கொடுமையென
தாயை இழந்தவள்
அனாதையென
என் வலியினை நீ அறிய
வாய்ப்பில்லை
கண்ணீரை துடைத்துவிட-உன்
கல் நெஞ்சில் ஈரமில்லை.
என் மைதீர்ந்த
எழுதுகோலிடம் கேள்
தனிமையின் ரணங்களை
தவிப்போடு சொல்லும்..
தாயவள் உனக்கான என்
துடிப்பை என்
தலையணையிடம் கேள்
விடியாத என் இ
சிதறிய வரிகள்
தனிமை தீண்டும் இன்பம்
இன்பத்தில் வரும் மயக்கம்
மயக்கத்தில் உன் வாசம்
உன் வாசத்தில் என் நொடிகள் கரைய
மீண்டும் தனிமை துரத்தியதோ.
துரத்திய தனிமையில் வற்றும் என் தாகம்
தாகம் தீர்க்க நீ வர,
மயக்கத்திலே காத்து இருக்கிறேன்...
நீ எனை நெருங்கும் நொடிகளில்
அள்ளி அணைக்க ஏங்கும் என் கைகளில்
தடையேதும் இல்லாமல் வருவாயா...
சிதறிய வரிகள்
தனிமை தீண்டும் இன்பம்
இன்பத்தில் வரும் மயக்கம்
மயக்கத்தில் உன் வாசம்
உன் வாசத்தில் என் நொடிகள் கரைய
மீண்டும் தனிமை துரத்தியதோ.
துரத்திய தனிமையில் வற்றும் என் தாகம்
தாகம் தீர்க்க நீ வர,
மயக்கத்திலே காத்து இருக்கிறேன்...
நீ எனை நெருங்கும் நொடிகளில்
அள்ளி அணைக்க ஏங்கும் என் கைகளில்
தடையேதும் இல்லாமல் வருவாயா...
சாதி ஒரு பரம்பரை நோய்
"ஒரு கட்டுரை எழுதி,அதில் நால்வருக்கு புத்திபுகட்டி,நடப்பு சமூதாயத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு என் அறிவுச்சுடருக்கு பிரகாசம் இல்லை. எழுதியதற்க்கு காரணம் கோபம், என் கோபத்திற்கு சரியான வடிகால் கிடைக்கததால் இந்த கட்டுரை.நண்பர்களிடம் இதை பற்றி விவாதித்து உச்சுகொட்டி முடிப்பதற்கு மனம் தயாராகவில்லை.
"மனைவி கண் முன்னே காதல் கணவன் வெட்டிக்கொலை "இந்த செய்தி முதலில் தினமும் நடக்கும் சம்பவங்கள் என்றே கடந்து சென்றேன்.ஆனால் அதன் வீடியோ பார்த்தபொழுது,என் இமை அசையவில்லை, வயிற்றில் எதோ செய்தது,வீடியோ முடியும்பொழுது என் இமை ஓரத்தில் கண்ணீர
சாதி ஒரு பரம்பரை நோய்
"ஒரு கட்டுரை எழுதி,அதில் நால்வருக்கு புத்திபுகட்டி,நடப்பு சமூதாயத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு என் அறிவுச்சுடருக்கு பிரகாசம் இல்லை. எழுதியதற்க்கு காரணம் கோபம், என் கோபத்திற்கு சரியான வடிகால் கிடைக்கததால் இந்த கட்டுரை.நண்பர்களிடம் இதை பற்றி விவாதித்து உச்சுகொட்டி முடிப்பதற்கு மனம் தயாராகவில்லை.
"மனைவி கண் முன்னே காதல் கணவன் வெட்டிக்கொலை "இந்த செய்தி முதலில் தினமும் நடக்கும் சம்பவங்கள் என்றே கடந்து சென்றேன்.ஆனால் அதன் வீடியோ பார்த்தபொழுது,என் இமை அசையவில்லை, வயிற்றில் எதோ செய்தது,வீடியோ முடியும்பொழுது என் இமை ஓரத்தில் கண்ணீர
" ரெடியா....? நா இன்னும் பத்து நிமிஷத்துல அங்க வந்துருவேன்..."தொலைபேசில் தருண்யா.அவள் குரலில் ஒரு தீர்க்கம், ஒரு தெளிவு இருந்தது.
" கடிகாரம் 8.55 காட்டியதை பார்த்து விட்டு பதில் சொன்னான் ,ம்ம்... நானும் ரெடி.வீட்ல இருந்து கிளம்ப போறேன்..." ஆரவ் குரலில் ஒரு ஈடுபாடு இல்லாத, ஒரு ஏற்புத்தன்மை இல்லாமல் இருந்தது.
" பைக்ல வேணாம், பஸ்ல போலாம்"...ஒரு நொடியில் இருவரின் குரலில் ஒரே வார்த்தையில் முற்றி கொண்டனர்.இது அவர்களுக்கு ஆச்சர்யம் இல்லை.இது போன்று முற்றல் பழக்கப்பட்டு இருந்ததுதான்.தொலைபேசியும் துண்டிக்கப்பட்டது
"சரி இவர்கள் சந்திப்பதற்குள், இவர்களை பற்றி ஒரு சிறு முன்னோட்டம்.இவர்கள
சன்னலோர கதை -2
"சில நாட்களுக்கு பின் ஒரு நாள்"
" ராம் தன் வழக்கமான சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்தான், அவன் செல்லும் காலை நேரத்தில் பேருந்து அவ்வளவாக கூட்டத்தில் நிறைவதும் இல்லை,"
"அதனால் என்னவோ நடத்துனரும், பேருந்தில் பயணம் செய்பவர்களில் சிலர் மட்டும் பார்த்தால் சிரிக்கும் அளவில் மட்டும் இருந்தனர்."
"அதில் பிரியாவும் ஒரு நபர் தான்,ஆனால் சிரிப்பெல்லாம் கிடையாது,ராம் மட்டும் எப்பொழுதும் பேருந்தின் இடது சன்னல் ஓரம் தான், வாரம் ஐந்து நாட்கள் அவனுக்காகவே என்று ஒது
அதிகாலை நேரம்...சூரியன் எப்போதும் போல் உதித்தது...ராணி கண் விழித்தாள்.. கண் முன் காபி .. எப்போதும் போல் அம்மா இன்றும் வைத்து விட்டாள்.
" அம்மா.. காபி சூடா இல்லை..." என்றாள் கோபத்துடன் , 19 வயது கல்லூரி பெண்..
ராணி எப்பொதும் சமையல் பக்கம் போகாதவள்.அம்மாவை திட்டாமல் ஒரு நாள் கூட அவளுக்கு வேலை ஓடாது. அப்பா வேலைக்கு கிளம்பிவிட்டார்..ராணி கிளம்பினாள் அலுப்பாக..
கல்லூரி வந்து சேர்ந்துவிட்டாள் ஒரு வழியாக . அன்று புதிதாக ஒரு பெண் இவள் வகுபிற்கு வந்தாள்.. தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டாள்.
" என் பெயர் கயல் . நான் முதலில் வேறு கல்லூரியில் படித்தேன்.இப்போது என் அப்பா வேலை இங்கு மாற்றி விட்டனர்
சன்னலோர கதை -1
"ஜவுளிக்கடையில் உள்ள நாகரீக அலங்காரத்தில் ஆன சிலையைப் போல், வந்தவர் அனைவரையும் வணங்கிய நிலையில் இருந்த போது ,
"பிரியா நீ அவர்ட்ட ஏதாவுது பேசணும்னு தோணுச்சுனா பேசிட்டு வாங்க"அனுமதி தந்தாள் ராணி
"ஸ்ரீ முதலில் மாடிப்படி ஏற,பிரியா பின் நடந்தாள். காலை ஏழு மணிச்சூரியன் அவர்களை தொந்தரவு செய்யவில்லை,மாடியின் சுவற்றில் மட்டும் ஒரு காகம் மற்றும் பெரிய கண்கள்,நாக்கை வெளியில் தொங்கவைத்து இருக்கும் திருஷ்டி பொம்மையும்"
"காகம் இவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிக்கும் தொனியில் திரும்பி அமர்ந்தது."
"ஆனால் அந்த