விளைபூமி துஷி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விளைபூமி துஷி
இடம்:  ஆஸ்திரேலியா
பிறந்த தேதி :  21-Apr-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Oct-2013
பார்த்தவர்கள்:  153
புள்ளி:  38

என்னைப் பற்றி...

இரவில் மட்டும்....????
இன்னும்
எத்தனை நாள்கள்
இரவில் நனைவது
என் விழிகள் உறக்கமற்று.????

அந்நிய தேசத்தில்
அடைக்கலம் நான். வசதிகள்
அனைத்தும் இருந்தாலும் - தினம்
அன்னை மண்ணுக்கு ஏங்கும்
அப்பாவித் தமிழன்தான்......!!!!

என் படைப்புகள்
விளைபூமி துஷி செய்திகள்
விளைபூமி துஷி - வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2013 9:43 pm

காலம் எமது எதிரியாகலாம்
கூடிவாழ்ந்தவன் காட்டிக்கொடுக்கலாம்
பல பேர் இங்கு துரோகியாகலாம்
சூழ்ச்சி பலவும் எதிரி செய்யலாம்
சுதந்திரம் பெற்று தமிழீழம் அமைப்போம்
தலைவன் இலட்சியத்தை மனதினில் கொண்டு
தமிழர்கள் இங்கு பலபேர் உண்டு

உலகம் யாவும் தடைகளாகலாம்
தடைகள் யாவும் பொடிகளாகலாம்
தரணியில் ஒருநாள் உயர்ந்து நிற்போம்
தனிநாடு பெற்று தமிழீழம் அமைப்போம்

வரலாறு எனது வழிகாட்டி என்றானே
கல்லணை கட்டிய கரிகாலனே
தமிழீழம் கட்டத்தான் பிறப்பெடுத்தானே

கடல்புறா புத்தகம் வாசித்தான்
கடல்புறா கப்பலை வடிவமைத்தான்
கடற்படை உருவாக்கினான்
கடற்புலிகளால் எதிரிகளை கலங்கடித்தான்

மகாபாரதம் புத்தகம் வாசித்தா

மேலும்

மகாபாரதம் புத்தகம் வாசித்தான் போர்நெறிகள் யாவும் அறிந்தான் ஒழுக்க சீலனாய் வளர்ந்தான் ஓராண்டுக்கு ஒருமுறை மட்டும் பேசினான் 25-Aug-2014 6:02 am
வாசிபமதம அவர்களே !ஒன்றுபடுவோம்!வென்றுசூடுவோம் தனிஈழம் !நன்று ! 17-Jun-2013 7:21 am
இப்படி ஒரு மாவீரனைப் பற்றி எழுதும்போதே எழுச்சி கொள்ளும் எமது எழுதுகோலும் நெருப்பை கக்கும். ஈழம் என்பதில்தான் விடுதலையே இருக்கிறது, அதை அடைய நம் தலைவன் வழயில் நாம் நடந்தாகவேண்டும். 16-Jun-2013 2:33 pm
thalaivan 15-Jun-2013 11:15 pm
வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Jun-2013 10:40 pm

தமிழீழக் குடிமக்களே
தாகங் கொண்டவன்
தரைக்குள் இருந்து பேசுகிறேன்

மண்ணின் சுமையோடு
மக்கிய உடலோடு
மங்காத இலட்சியத்தோடு
மரணித்தவன் பேசுகிறேன்

கார்த்திகை இருபத்தியேழில்
காந்தள் மலருக்கு ஏங்கி
கல்லறைக்குள் இருந்து பேசுகிறேன்

மரணத்தை சுவாசித்து
மண்ணை நேசித்து
மண்டியிட்டு முத்தமிட்டேன்
மண்ணே என்னை
முழுவதும் முத்தமிடுவதாய்
உணர்கிறேன் கல்லறைக்குள்

தாயின் கருவறையில் பெற்ற
இளஞ்சூட்டின் சுகம்
தாய்மண்ணுக்குள் துயிலும் போது
மீண்டும் காண்கிறேன்

கனமழைக்கு மத்தியில்
காட்டுப் பனைமரத்தில்
கத்தி கொண்டு
குத்தி எழுதிய
எனது பெயர் இன்னும் இருக்கிறதா?
கொஞ்சம் பார்த்து வந்து சொல்லுங்கள

மேலும்

கனமழைக்கு மத்தியில் காட்டுப் பனைமரத்தில் கத்தி கொண்டு குத்தி எழுதிய எனது பெயர் இன்னும் இருக்கிறதா? கொஞ்சம் பார்த்து வந்து சொல்லுங்கள் 25-Aug-2014 6:00 am
நன்றி தொடர்ந்தும் எழுதுவேன் தோழர் 13-Jun-2013 9:54 pm
சிறந்த படைப்பு... தொடந்து எழுத வாழ்த்துக்கள்... 13-Jun-2013 9:12 pm
அந்த கனவில் தான் அனுதினமும் இருக்கின்றோம் தோழர் மிக்க நன்றி 12-Jun-2013 9:31 pm
விளைபூமி துஷி - வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2014 7:43 pm

அனலைக் கக்குகிறது
இனவாத நெருப்பு
வியர்த்துக் கொட்டுகிறது
விடுதலைக்கு ஏங்கும் உடல்

விடுதலைத் தென்றல்
வீசும்போதே இலட்சிய உடல்
வியர்வை யடங்கும்-இல்லையேல்
வித்துடலாகிப் போகும்

கடலலை வீச-மூடன்
தடையுத்தரவு பிறப்பிக்கிறான்
எங்கள் விடுதலைச் சூரியன்
உதிப்பதை தடுப்பதாய் நினைத்து
மேகங்களை ஏவிவிடுகிறான்

பசிதான் -அட
பல ஆண்டுப் பசிதான்
அதற்காய்
எதிரி விட்டெறிந்த
எலும்புத்துண்டை கவ்விக் கொண்டு
பசியாற நினைப்போமா?-அட
மாவீரர்களின் இலட்சியக் கனவை
மண்ணோடு புதைப்போமா?

காட்டை யழித்தான்
கஞ்சிக் கலய முடைத்தான்
எங்கள் வீட்டை யுடைத்தான்
நாளை நாட்டை யுடைப்போம்
தரணியில் தமிழனுக்கென்று
தன

மேலும்

காட்டை யழித்தான் கஞ்சிக் கலய முடைத்தான் எங்கள் வீட்டை யுடைத்தான் நாளை நாட்டை யுடைப்போம் தரணியில் தமிழனுக்கென்று தனிநாடு படைப்போம் தமிழீழம் அமைப்போம் 25-Aug-2014 5:51 am
விளைபூமி துஷி - வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2014 7:46 pm

நாடெல்லாம் நீயும்
நாதியத்து அலையும் தமிழனே!
நாடுபெற உமக்காய்
நஞ்சுண்டு யிங்கு
நாடுகாக்க உயிர்விட்ட
நாயகர்களைப் பாரடா

தாய்மண்ணீரம் பெற்று
தமிழன் கண்ணீரம் வற்ற
தரணியில் தமிழனுக்கொரு
தனிநாடு அமைக்க
விழியினை திறடா-அடேய்
தமிழா விழியினைத் திறடா

உரிமைக்காய் விழிதிறவா தமிழா-நீ
உயிர்வாழ்தல் பயனன்றோ?
இனத்திற்காய் தமிழா நீயும்
இமை திறவாதிருந்தால்
கண்ணிருந்தும் குருடன்றோ?
தமிழ்த்தாய் ஈன்றெடுத்த மக்களுள்
சுரணையற்ற மலட்டு மகனன்றோ?

உடல் சோர்வை முறிக்க
குளிப்பது போல்-பலர்
உணர்வுபெற தமிழரென்று
உடலுக்கு தீமூட்டும் நிலையோ யிங்கு?

மாண்ட மாவீரர்கள்
மறுபடியும் மீண்டெழுந்து
மகிமைதனை

மேலும்

மாவீரர்களின் இலட்சியத்தை மனதினில் ஏற்றி-தமிழா மானவுணர்வோ டெழுந்து மண்ணை மீட்டிட எழடா இழவெடுத்த இனமடா நாம் இன்னும் இமைதிறவாதிருப்பது ஏனடா? (இன்னும் உறைக்கட்டும் இனர்களுக்கு உரக்க சொல் தோழா..... 25-Aug-2014 5:49 am
விளைபூமி துஷி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2014 8:34 am

இருட்டு மட்டும்.......
இனி...........?
விலகியே இருக்கட்டும்.....?

இனிமையான........
பொழுதுகளுக்கு.........!
இடைவேளை போடுகின்றன...........?

காலை மட்டும்........
கனவுகள் நிறைவேறட்டும்......?
காலம் பேசுகின்ற................
கவியே பாடுகின்றேன்........!

வின் மீன்கள்.......
வேண்டுமா & இல்லை........?
நிலவும் அருகில் வேண்டுமா.......?
கோரிக்கையிடுவோம் அவைக்கு.....?

மலரும் நினைவுகளை.......
விழிகளால் பார்க்க.........
சற்று........
நடந்து சென்று பார்த்தால்.....
அங்கு யாவும் கற்ப்பனை......!

புதையல் தேடிய உலகம்.....
புதைந்தே போனது நேற்று.....?
புன்னகையுடன் வாழ்கிறேன்....
புத

மேலும்

நன்றி நண்பா! 04-Jul-2014 8:05 am
மலரும் நினைவுகளை....... விழிகளால் பார்க்க......... சற்று........ நடந்து சென்று பார்த்தால்..... அங்கு யாவும் கற்ப்பனை......! அருமை அழகு :) 03-Jul-2014 9:28 am
விளைபூமி துஷி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2014 7:19 am

எங்கெல்லாம்
ஓடுவதோ .............!
ஒருவரும்
தேற்றவில்லை எம்மை......?

இருந்திருந்தால்
முடிந்திருப்போம்
என்றுதான்
எழுதினால் புரியுமா உனக்கு??????

இரத்தங்கள்
சிந்திய சேற்றில் –இனி
இனிதாகுமா..........
எங்கள் வாழ்வேதான்...

பசியோடுதான்
நாமீங்கே வந்தோம்
பலர் ஏக்கத்தொடுதான் அங்கே????

அலையோடு.........
படகேறி –பலர்
அகதிதான் என்றாலும்
இன்னும்
வெந்தணலில் சிக்கிய மீனாய்
வெந்துதான் வாழ்கிறோம்மா......!

கனவுதான்
கான்கிறோமோ –இல்லை
கண்டங்களில்
தாகசாந்தியா புரியவில்லை......?

சத்தியமான
வார்த்தை நண்பா –புது
சரித்திரத்தை புரட்டிபோடலாமே......!

இலக்கியத்தில் புதுமை

மேலும்

விளைபூமி துஷி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2014 7:08 am

மனிதனின்....!
மனதுக்குள்தான்.........
மணிக்கணக்கில் குழப்பங்கள்........?

மலர்கள்...
உதிரும்போது...
மனங்கள்.......வாடுவதில்லைதன்.....?

இயற்க்கை....
தத்துவம் கூட...
இருக்கும் நமக்கு புரிவதில்லை.....?
இனங்களின் மலர்வில்.....!
காப்பாற்றும் ஞானி.... & சாமி....யாரு?
புதிராகத்தான் இருக்கிறது.....!

கிரிக்கெட்டில் சூது...?
சினிமாவில் மோதல்....?
அரசியலில் தவலென்று....!
அதிரடியாக ஓடிக்கொண்டோம்......!

காரணமற்ற காதல் கூட...?
கடைசியில் கல்லறைதான்.....?
நிரந்தரமற்ற எம் வாழ்வும்.....?
நினைத்தபடி இல்லைத்தான்....!

விருப்பம் வேண்டிய மனிதன்...
விடுதலை &தறுதலை புரிதல்லின்ரி....
வீன

மேலும்

நன்றி தோழா.... 30-Jun-2014 8:50 am
மலர்கள்... உதிரும்போது... மனங்கள்.......வாடுவதில்லைதன்.....? அழகு :) 30-Jun-2014 8:43 am
விளைபூமி துஷி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2014 10:47 am

வினோதமானவளே.......?
உன் எண்ணங்களால்......!
கலைகின்றது என் கனவுகள்....?

கடந்து கொண்டிருக்கும்.....?
வாழ்க்கை ஓட்டத்தில்........?
கால்கள் கூட ஓட மறுக்கின்றது...!

உன்னால்.....
மனதில் எழுகின்ற.....?
என் எண்ணக் குதிரைக்கு....?
கடிவாளமிட முனைகிறேன்....?
முடியவில்லை என்னால்.........!

என் மனம்......
மூக்காணாம் கயிறு அறுத்த மாடாய்....!
உன்னை சுற்றியே ஓடுகிறது....?

யாசாகியே.....?
என் வாழ்க்கை படகுக்கு.....?
துடுப்பாய் இருப்பாயா..........?
வினோதமானவளே எப்பொழுதும்....!

மேலும்

நன்றி தோழா?? 26-Jun-2014 4:02 pm
அருமை நட்பே 26-Jun-2014 11:38 am
விளைபூமி துஷி - விளைபூமி துஷி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2014 8:13 am

இனியவளே....?
எனக்கு மட்டும்...?
உன் சம்மதம் கிடைத்தால்....?
விண்ணைக் கூட தண்டிவிடுவேன்.....!

தத்தி தாவும் மனதில்தான்....?
உருகும் பனி மலையாய்.....! உன்
தங்க ஓளி மின்னல்கள்.....? எனக்குக்குள்....!

காதல் என்னும்...?
மாயா வலையில் சிக்கிடாத....!
மனங்கள் மட்டும் உண்டா.....?

என்னை கடந்து செல்லும்....?
உன் பார்வை மின்னலை....!
மட்டும் சேமித்தாலே...? ஊருக்குள்.....!
மின்சார வெட்டு நீங்குமே.....? சகியே....!

எது....?என்னவோ....?
இறுக்கிய உலகில்....?
இதம் தரும் சுகமாய்....!
இனையராகங்களாய் இன்னும்...?
இன்னும் ஒலித்துக்கொண்டேயிருக்கு....!

மேலும்

நன்றி தோழர்களே!!!!!!!!!! 26-Jun-2014 10:07 am
அழகு நட்பே!! 21-Jun-2014 10:09 am
மின்சார தேவதை அழகு ! 21-Jun-2014 9:38 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (30)

சிவா

சிவா

Malaysia
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (30)

மேலே