விழியினைத் திறந்து விடிவினை நோக்கு

நாடெல்லாம் நீயும்
நாதியத்து அலையும் தமிழனே!
நாடுபெற உமக்காய்
நஞ்சுண்டு யிங்கு
நாடுகாக்க உயிர்விட்ட
நாயகர்களைப் பாரடா

தாய்மண்ணீரம் பெற்று
தமிழன் கண்ணீரம் வற்ற
தரணியில் தமிழனுக்கொரு
தனிநாடு அமைக்க
விழியினை திறடா-அடேய்
தமிழா விழியினைத் திறடா

உரிமைக்காய் விழிதிறவா தமிழா-நீ
உயிர்வாழ்தல் பயனன்றோ?
இனத்திற்காய் தமிழா நீயும்
இமை திறவாதிருந்தால்
கண்ணிருந்தும் குருடன்றோ?
தமிழ்த்தாய் ஈன்றெடுத்த மக்களுள்
சுரணையற்ற மலட்டு மகனன்றோ?

உடல் சோர்வை முறிக்க
குளிப்பது போல்-பலர்
உணர்வுபெற தமிழரென்று
உடலுக்கு தீமூட்டும் நிலையோ யிங்கு?

மாண்ட மாவீரர்கள்
மறுபடியும் மீண்டெழுந்து
மகிமைதனை செய்வதில்லை
மாவீரர்களின் இலட்சியத்தை
மனதினில் ஏற்றி-தமிழா
மானவுணர்வோ டெழுந்து
மண்ணை மீட்டிட எழடா

இழவெடுத்த
இனமடா நாம்
இன்னும்
இமைதிறவாதிருப்பது ஏனடா?

உள்ளக்கிலிதனை நீவிரட்டி
உனக்கான நாட்டினைப் பெற
உன்னிலுறங்கும் வீரம்தனை காட்ட
எழடா தமிழா! எழு

எழுதியவர் : வா.சி. ம.ப. த.ம.சரவணகுமார் (16-Aug-14, 7:46 pm)
பார்வை : 198

மேலே