தியாகத் தீபம்

யாறிவார் என்னுணர்வை
யார் கேட்பார் என்கதறலை
என்றோ ஓர்நாள் இறந்தவனுக்காய்
இன்றமைர்ந்து தேம்பி தேம்பியழுவதால்
இருப்போரென்ன நினைப்பர்?

இழந்து பலவாண்டு ஆகிறது
இருந்தும் அண்ணன்
இறந்து தந்த வலி அகலவில்லை

எத்தனையோ நாட்கள்
தீயாகதீபம் நெஞ்சினில் குடியேறி
கண்களில் வெள்ளத்தைப்
பெருகச் செய்திருக்கிறது

மண்ணை நான் பார்க்குமுன்
மடிந்து போனவன் திலீபன்
வரலாற்று புதல்வன்
வாழ்கிறான் பலர் உள்ளத்தில்

வரலாற்றுப் புதல்வர்களை காதலிப்போர்
அதன் வலிகளையும் சேர்த்தே உள்வாங்குவர்
மு.வே.யோ.வாஞ்சி ஐயா எழுதிவைத்த
பன்னிரண்டு நாட்களின் நினைவென்பது
தியாக வேள்வியின் வரலாறு
விடுதலைத் தீமூட்டும் தீப்பொறி

அணுவணுவாய் செத்தான்
அண்ணன் அணுவணுவாய் செத்தான்
அன்பு தமிழீழ மக்களே யென்றான்
ஓவென அழுது கொண்டியது
கூடியிருந்த தமிழ்ச்சனம்

அகிம்சை ஆடையிழந்தது
அயலுறவு சந்தி சிரித்தது
காந்தி தேசமினி
அகிம்சைப் பற்றி கதைக்க
அறுகதையற்றுப் போனது

காந்தியத்தின் காலடியில் அல்லவா
காவியப் புதல்வனை இழந்தோம்
வெட்கி தலைகுனிக! காந்திய நாடே!
வெட்கி தலைகுனிக!

அன்று அண்ணன் கிழித்த
இந்திய அகிம்சை முகத்திரை
இதுவரை தொங்கிக் கொண்டிதானிருக்கிறது
இந்தியம் அன்றல்ல
இன்றுவரை திருந்தவில்லை

அண்ணன் சாகக் காரணத்தானை
அட நானெப்படி சகோதனென்பேன்
அன்னை திருநாடு பாரதமென்று
அடியேன் எப்படி உரைப்பேன்?

அப்படி நானுரைத்தேன் எனில்
அன்றே என் நாவழுகிவிடும்
உடலொன்றிய உயிரும் அன்றே
எனைவிட்டு பிரிந்துவிடும்

எழுதியவர் : வா.சி. ம.ப. த.ம.சரவணகுமார் (16-Aug-14, 7:48 pm)
பார்வை : 186

மேலே