பெண்ணே வாரும்
வயிற்றில் சிசுவை மட்டும்
சுமந்த பெண்மை
தமிழ்மண் மீதினில்-நெஞ்சில்
போரிடும் தீயினை சுமந்திட்ட
வரலாற்றைக் கேளும்
தாய்நாடு தின்னவந்த
பகையை விரட்டி ஓடவிட்ட
தமிழீழப் பெண்கள்
வீரமதைப் பாரும்
வில்லம்பு விழிகள்
குறிபார்த்து தோள்களில்
எரிகணைகள் சுமந்த
எரிமலை வீராங்கனைகளைப் பாரும்
பெண்ணை மிதித்த மண்ணில்
மண்ணை மீட்கெழுந்து
மாவீரம்தனை காட்டிய
மகளீரைப் பாரும்
மக்களையும் மண்ணையும்
காதலித்த அவர்கள்
பாசத்தைக் கேளும்
அழகு பட்டுடுத்தி
பாவாடையும் பாதியாக்கி
கலாச்சார முன்னேற்றமென
கதைவிடும் பெண்ணே-உன்
கண்ணெதிரே நடந்த-பெண்வீர
காவியத்தை வந்து கேளும்
அடுப்பூதி கழித்தோர்
அன்னைமண் மீட்க
அனல்மூட்டி நெஞ்சினில்
ஆயுதமெடுத்தனர்-களத்தினில்
அழித்தனர் பகைவனை
அள்ளித் தலைமுடிந்து-நீ
அலங்கார மையுமிட்டு
ஆடிக்களித்திருந்தது போதும்
வீடு விட்டிறங்கி-நீயும்
வீதி வந்துமே-தனிநாடு
கேட்டுப்போராட வாரும்
பருவமங்கை நீயும்
ஆடி அசைந்து வரும்
அன்னநடைகள் போதும்
தமிழர் தாக முழக்கமிட்டு
ஐ.நாவை அதிரச் செய்ய
துணிந்தெழுந்துமே நீயும் வாரும்