ஆவாரம் பூ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆவாரம் பூ |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 1740 |
புள்ளி | : 171 |
ஆத்தோரம் பூத்த பூ
ஆகாய சூரியனை கண்டு மகிழும் பூ
ஆண்டு பல கண்டும், வாடாத
ஆர்வ பூ
ஆசையாய் அன்னை தமிழை
ஆனந்தமாய் அணைக்க வந்த
ஆரவார பூ இந்த
ஆவாரம் பூ
தோழமை நெஞ்சங்களே
வணக்கம் . நலந்தானே..
23.03.2014 ஞாயிறு காலை 9.30 மணிக்கு புதுச்சேரி ,இலாசுப்பேட்டை,கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள விவேகானந்தா மேனிலைப்பள்ளி வளாகத்தில் "தமிழன்பன்-80 விருதளிப்பு மற்றும் நூல் வெளியீடு விழா " நடைபெற உள்ளது.
அனைவரும் வருக...
தலைமை : சிலம்பொலி சு. செல்லப்பன்
வாழ்த்துரை.: ம.இலெனின் தங்கப்பா
முனைவர் க. பஞ்சாங்கம்
முனைவர் யா. மணிகண்டன்
விருதளிப்பு,நூல் வெளியீடு மற்றும் ஏற்புரை:
ஈரோடு தமிழன்பன்
கவியரங்கம்
கபிலன் ,யுகபாரதி ,ஹாஜா கனி ,இளம்பிறை ,ஈழவாணி ,பச்சியப்பன் ,அப்துல் ரசாக் ,தமிழமுதன் ,சொற்கோ கருணாநிதி ,கவிமுகில் ,
விருது பெரும் நமது தோ
“நற்றமிழ் வளர்சேவை நன்மாமணி.-2013.
குன்றுயர் மாமணிகள் பலர் இவ் அவனியில்
நன்று உன் சேவையென நாளும் வாழ்த்தும்
மன்றமென இத்தளம் வளர்ந்துயர் புகழ் பெற
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,
கன்று என வந்தோற்கு களம் அமைத்து
நன்று வளர்த்து நானிலம் போற்ற
என்றும் புகழ் பல பெற்றிட அழகிய
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,
கவனிக்கிறது உன் சேவையை நானிலம்..
அவனி முழுதும் நம் அழகுத் தமிழின்
பவனி .வந்திட வாழ்ந்திட வளர்ந்திட
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,
சீறிப் பாயும் சீற்றத் தமிழ் -உயர் காதல்
ஊறி மேவும் வாலிபத் தமிழ் -மண்ணில் மானுட
அன்பு மேவும் தோழ
வணக்கம் தோழமை நெஞ்சங்களே..
நாள்தோறும் எண்ணற்ற படைப்பாளிகள் தளத்திற்குள் வந்து படைப்புகள் பதிகிறார்கள்...பலர் தொடர்வதில்லை ...சிலர் விலகுவதில்லை...
பிற தளங்களில் படைப்புகள் என்ணிக்கை வரையறுக்கப் பட்டுள்ள நிலைப்பாடு உண்டு...இங்கு அது இல்லை ..இது ஒரு நல்ல வாய்ப்பு ...
வாலிப பறவைகள் பல, பல வழிகளில் தங்கள் ஓய்வு நேரத்தை கழிக்க ஒழுக்க கேடானான வாய்ப்புகள் இருந்தும் இத்தளம் வந்து நல்லொழுக்கத்தொடு வாழும் பல வாலிபர்களை நான் காண்கிறேன்...குறிப்பாக வெளி நாடுகள் வாழ் நம்மவர் இத்தளத்தைப் பெரிதும் பயன்பாட்டு வெளியாக்கி வாழ்வது தமிழ் வளர பரவ ஒரு நல்ல சங்கதியாகும்...தமிழ்க் களமாகும் இத்தளத்தில் வெகு வ
தோழமைகளுக்கு வணக்கங்கள்...
பன்னாட்டுப் படைப்பாளிகளின் பைந்தமிழ் ஆக்கங்களாக -எழுத்துப் பலகாரங்களாக நாம் நாள்தோறும் பல இங்கு சுவைத்து வருகிறோம்.
சுவைக்கு கூடுதல் சுவை ஊட்டுபவை கருத்துக்கள்...
கருத்துக்களில் நகைச்சுவை ...நக்கீரப் பார்வை...நளின சுட்டல்...தோழமைத் தேற்றல்..என்று இருப்பின் நலமே
எவருக்கும்..அனுபவத்தின் வெளிப்பாடே சுட்டல் என்க...அனுபவம் என்பதன் மறு பெயர் முன்பே செய்த அல்லது அறிந்துள்ள தவறு எனக் கொள்க. தான் செய்த தவறு இனங்கண்டறியப்படின் அதனைச் சுட்டுவதில் தடை இருக்கக் கூடாது...இருப்பின் மொழிச்சிதைவே உண்டாகும் அல்லவா...??
தளத்தில் படைப்புகள் மீதான கருத்துக்கள் உரைப்பது