குமார் பாலகிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : குமார் பாலகிருஷ்ணன் |
இடம் | : Tiruppur |
பிறந்த தேதி | : 11-Nov-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 840 |
புள்ளி | : 393 |
கடலினுள்ளே நான் நீந்துகையில் மீன் எச்சிலெல்லாம் ஒரு வருத்தமில்லை!
பலூன்கள் உடைந்தும்
சிலகனங்கள் கைகளின் ஊடாக
பறந்துகொண்டிருக்கிறது உருவம்
வயதுகள் முதிர்ந்தும்
நியாபகக் கிடங்கில் நீந்திய வண்ணமிருக்கிறது பலூன்கள்
பலூன்களில் சிலவற்றை கார்பன்டை ஆக்ஸைடும்
சிலவற்றை ஹீலியமும்
இன்னும் சிலவற்றை மாமாக்களின் வறுமையும் பறக்கச் செய்கின்றன
அவர்களுக்கு நான் இப்படியே இருப்பது பிடித்திருக்கிறது.
அதே சமயம் நான் எப்போதும் இதேபோல் இருக்கபோவதில்லை என்பதும் தெரிந்திருக்கிறது!
அவர்கள் உடலெங்கும் பதட்டம் விரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. அவர்களின் நரம்புகளின் ஊடாக படபடப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.
அவர்கள் ஆசுவாசப்பட சிலவிநாடிகள்
அவகாசம் கொடுத்திருக்கிறேன். அது முடிந்தவுடன்
பெரும்வலியை மறைத்தபடி
சுற்றி யார் இருப்பினும்
என்ன ஆகினும்
துல்லியமாக ஐந்து மணிக்கு
என் அலைபேசியில் அழகுற சிரிக்கும் அந்த அலாரம் குழந்தையைப் போல
சிரிப்பது எப்படியென
கற்றுக்கொடுக்க இருக்கிறேன்.
அன்பு
எல்லைகளற்று எங்கெங்கும் கொட்டிக்கிடக்கிறது!
முன்பு தொலைபேசி அழைப்புகளிலும்
பின்பு முகநூல்
உணர்வுகளிலும்
அன்பை கச்சிதமாய் காட்டிவிட எத்தனிக்கிறவர்கள் நிச்சயமாய் அறிகிலார்
அன்பு அதையும் கடந்ததென்று!
உங்களை நிராகரித்த அவளோ அவனோ கட்செவி அஞ்சலில்
உங்கள் கடைசிப்பார்வையையும் நிலைத்தகவலையும்
கவணிக்கும் அச்சில விநாடிகளுக்குள் உங்கள் இருவருக்கும் கூட தெரியாமலே
ஒரு அன்பு பிரவாகமெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது!
உங்களுக்கு துளியேனும் பிடிக்காத ஒருவரைப் பார்த்து நீங்கள் முகம் சுளிக்கும் போது
உங்களை கடந்து அவரை தீண்டும் அந்த மென்காற்றில் அன்பும் கலந்திருக்கிறது என்பது ஆச்சரியமாக
@@@@@@@@##
மகாகவி ஈரோடு தமிழன்பன் 84 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் " ஈரோடு தமிழன்பன் ஆயிரம் " நூல் வெளியீடு..... மற்றும் விருதளிப்பு
@@@@@@##
நாள் 12.11.2016
இடம் : முத்தமிழ்ப்பேரவை , திருவாவடுதுரை இராஜரத்தினம் கலையரங்கம் ,
இராஜா அண்ணாமலை புரம்
( எம்.ஜி.ஆர்_ ஜானகி கல்லூரி எதிரில்)
தோழர்களே....
வணக்கம்.
எழுத்து வீதியில்
அலங்கார கோலமி்ட
வாக்கியப் புள்ளிகள் தந்த
உங்களுக்குக் களிப்புக் களிம்பு
பூச அழைக்கிறேன் ....
வாரீர்...
உங்கள் விரல்களைத் தமிழால் அலங்கரித்து மகிழ அழைக்கிறேன் வாரீர்...
உங்கள்
கற்பனைப் பறவைகள்
நூல் வானில் பறப்பதையும்
காண வாருங்கள்.....
பிற
அதிகபட்சமாய் என்ன செய்யமுடியும் உன்னால்
உனக்கு மனப்பாடமாய் தெரியும் என்பதையும் மறந்து, என் எண்ணை உன் அலைபேசி நினைவில் இருந்து நீக்குவதை தவிர!
அதிகபட்சமாய் என்ன செய்யமுடியும் உன்னால்
உனக்கு மனப்பாடமாய் தெரியும் என்பதையும் மறந்து, என் எண்ணை உன் அலைபேசி நினைவில் இருந்து நீக்குவதை தவிர!
ஒரு யாசகன்
கடும் வெயிலில்
மழையில்
சாக்கடை நாற்றத்தில்
பூக்கடைத் தெருவில்
சிக்னலில்
ட்ராபிக்கில்
தேநீர்க் கடையில்
வீடுகளில்
சந்தை வீதியில்
ஆலயங்களுக்கு வெளியில்
இன்னும் பல இடங்களில்
ஏளனங்களுக்கிடையிலும்
தூற்றுதல்களுக்கிடையிலும்
சேகரித்த சில்லறைகளில் சிலவற்றை
**அருள்மிகு டேஷ் சுவாமி** கோவிலின்
உண்டியலில் இட்டுவிட்டு நகர்கிறான்!
கொஞ்சநேரம் எதிரொலித்தபடியே இருக்கிறது
அந்த சில்லறை சத்தம்!!!'
தேக மெலனின்களுக்கு
மோக நிறம் தந்தாயே
இது எப்படிச் சாத்தியம்?
உன் சர்வாதிகார சமிக்ஞைகளை கடைவிரிக்க
பரந்து விரிந்த இப் பாரத பூமியில்
ஒருபிரதேசம் கூடவா கிடைக்கவில்லை உனக்கு?
இதயச்சுவர்களில் இதனமான அழுத்தம் தொடுத்து
நீ மீள்வினே படிப்பது நியாயமா?
கண்ணசைவின் வெப்பச் சலனங்களை
ஹார்மோனுக்குள் தந்திரமாய் கடத்தி
டன் கணக்கில் கலோரி கரைக்கும்
உனக்கேன் கொடுக்கவில்லை நோபல்?
நவரசங்கள் என்பதெல்லாம்
சுத்தப் பொய்
உன் பாதரசச் சினுக்கலையும் சேர்த்து
ரசங்கள் மொத்தம் பத்து
அறை வெப்பநிலையில்
வேதிவினை நிகழ்த்தும் நீ மட்டும்
என்னில் எவ்வித மாற்றத்தையும்
நிகழ்த்தாமலிருந்தால்
சிறந்த வினை ஊ
இன்று மழைப்பூக்கள் சிதறலாம்
நல்லவேளை குடை மறந்தேன்
பார்வைக்கு மாற்றாய் வாங்கிய வரமென
செவி நிறைக்கும் இசை ஞானம்
சாலையோர சிறுவனின் விரலசைவில்
குறையொன்றுமில்லை நமக்கு
முந்தியில் குழந்தையை ஒளித்தபடி
நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி
ஏனோ பிச்சையிட மனமில்லை
இன்னும் இந்தியா வளர வேண்டும்
அவசர போக்குவரத்தில்
நொடி நேர திகில் தரும்
ஒலிப்பானை அலற விடும்
இளைஞனைப் பிடித்து
நாகரீகம் பழக்க சினமுண்டு
முச்சந்திப் பிள்ளையாரிடம்
சிறு வேண்டுதல் இன்று
முகூர்த்த நாளாய் இருக்கட்டும்
பூக்காரப் பாட்டிக்காக
உறக்கம் தொலைத்த
கண்களில் பள்ளிச் சுமை தாங்கும்
பட்டுக் குழந்தைகளின்
நேற்றும் அதற்கு முன்தினமும்
ஒரு பெருமழையின்
நீரலைகளை அனுப்பினார்கள்,
என் நினைவுகள்
சொட்ட சொட்ட நனைந்தபடி
நீச்சல் கற்றுக் கொண்டது
முன்னொரு நாள்
ஒற்றைக் காலை தூக்கி
ருத்ர தாண்டவமாடிய
கற்றைக் காற்றை சிருஷ்டித்தார்கள்,
என் நினைவுகள்
வளிமன்டல வான்வீதியில் காற்றுக்கு
பறத்தல் வகுப்பெடுத்தது
இன்னொரு நாள்
பருந்தென அரிதாரம் தரித்தவர்களால்
அலகுகளாலும் நகங்களாலும்
நினைவுகளை ரணமாக்கவும்
எச்சமிடவும் மட்டுமே முடிந்தது.
நிஜங்களையும் நிழல்களையும்
கவரமுடியாதவர்கள்
என் நினைவுலகில் யாருமற்று
மௌனம் வியாபித்திருந்த தருணமொன்றில்
நகல்களை திருடி திருப்தியடைத்துவிட்டனர்.
முப்படகக் கண்ணாடி
ஒரு ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவனுடைய மகன் ராசி இல்லதவன் அவன் சொல்வதற்கு எதிர்மாறாய் நடக்கும் என்ற மூடநம்பிக்கையிலிருந்தான் விவசாயி.ஒருநாள் தந்தை களைபிடுங்கிக் கொண்டிருந்த தந்தையைப் பாராட்ட நினைத்த மகன் தந்தையிடம் பயிர் அருமையாக வளர்ந்திருப்பதாகக் கூறினான். இதைக்கேட்ட விவசாயி மகன் வாய்ராசிப்படி பயிர்களுக்கு பாதிப்பு ஏற்ப்படும் என்ற கவலையில் களைபிடுங்க மறந்தான். மறுவாரம் சென்று வயலைக்கண்டான். வயல் நிறைய களைவளர்ந்து இருப்பதைப் பார்த்து தன்மகன் வாய்ராசியால் வயல் மாறியதாக வருந்துகிறான். சட்டெனஅவன்மனதில் ' தன் மகன் இப்போது வயலைப் பார்த்தால் இவ்வளவு களைகளா என்பான் ' அவன் வாய்ராசிப்படி களைகள்
இருள் பிரதிநிதிகள் புடைசூழ
இந்திய பிராந்தியத்தின் கனவுதேவன்
என் கனவொன்றில் ஊடுருவுவதை ஊர்சிதப்படுத்திக் கொண்டவனாய்
உள்நுழைந்த கனவுதேவனை வழிமறித்து வாய்மொழிந்த கணத்தில்
அவன் ரதத்தின் பின்புறத்திலிருந்து உதிர்ந்த அட்டையொன்றை
நிச்சலத்தின் துணை கொண்டு திறக்கிறேன்!
அது பார்வையற்றவர்களின் கனவில் பயணிப்பதற்கான
நுழைவுச் சீட்டு!
காற்று மரங்களின் வேர்களைக் கிழித்துப் பறந்தபடி
அவர்களின் கனவுகளை நனைத்துக் கொண்டிருந்த போது
என் கனவுகளை தீச்சுவாலை தின்றுவிடுகிறது
அது எரிந்து முடிப்பதற்க்குள்
ஒரு ஃபைவ் ஸ்டார் அம்பை பிரயோகித்து
அந்தக் கனவுப் பிரவாகத்தில்
ஒரு நண்பனைச் சம்பாதித்துக் கொள்கிறே