நினைப்பதுவே

ஒரு ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவனுடைய மகன் ராசி இல்லதவன் அவன் சொல்வதற்கு எதிர்மாறாய் நடக்கும் என்ற மூடநம்பிக்கையிலிருந்தான் விவசாயி.ஒருநாள் தந்தை களைபிடுங்கிக் கொண்டிருந்த தந்தையைப் பாராட்ட நினைத்த மகன் தந்தையிடம் பயிர் அருமையாக வளர்ந்திருப்பதாகக் கூறினான். இதைக்கேட்ட விவசாயி மகன் வாய்ராசிப்படி பயிர்களுக்கு பாதிப்பு ஏற்ப்படும் என்ற கவலையில் களைபிடுங்க மறந்தான். மறுவாரம் சென்று வயலைக்கண்டான். வயல் நிறைய களைவளர்ந்து இருப்பதைப் பார்த்து தன்மகன் வாய்ராசியால் வயல் மாறியதாக வருந்துகிறான். சட்டெனஅவன்மனதில் ' தன் மகன் இப்போது வயலைப் பார்த்தால் இவ்வளவு களைகளா என்பான் ' அவன் வாய்ராசிப்படி களைகள் அழிந்விடும் என்று முடிவு செய்து தன்மகனை அழைத்துவந்து வயலைக்காட்டினான் . களைகள் நிறைந்த வயலைக்கண்ட மகன் தந்தை வருந்தக் கூடாதென நினைத்து 'இவ்வளவு களைகளுக்கிடையே கொஞ்சம் பயிர்களும் நன்றாக வளர்ந்துள்ளன ' என்றான். இதை எதிர்பார்க்காத விவசாயி மீண்டும் கவலையில் ஆழ்ந்தான் .வயலை மறந்து வீட்டில் முடங்கினான் .விவசாயம் வீனானது .மனம் நொந்த விவசாயி தன் குருவிடம் சென்று நடந்தவற்றைக் கூறினான். குரு சிறித்தபடியே ' உன் கஷ்டங்களுக்கெல்லாம் உன்மகனின் வாய்ராசி காரணமல்ல அவன் எல்லாவற்றையும் பாசிட்டிவாகத்தான் பேசினான்.ஆனால் அவற்றை நெகட்டிவாகவே நீ எடுத்துக்கொண்டாய் .அதன் விளைவுதான் உன் கஷ்டம்' என்றார் .உன் மனம் எதுவாக விரும்புகிறதோ ! அதுவாகவே நீ மாறுவாய் என்றுகூறி அனுப்பினார்

எழுதியவர் : moorthi (6-Jun-14, 5:40 pm)
பார்வை : 216

மேலே