kavitha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kavitha
இடம்:  kovai
பிறந்த தேதி :  09-Nov-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Oct-2014
பார்த்தவர்கள்:  612
புள்ளி:  152

என்னைப் பற்றி...

கவிதை எனக்கான அடையாளம் என கருதுகிறேன்....
கவிதையை தவிர வேறெதுவும் தேவை இல்லை எனக்கு ,
எனக்கு 11 வயது இருக்கும் போது தோன்றியது இந்த கவி ஆர்வம்....
மேலும் மேலும் நன்றாக எழுத முயற்சிகிறேன் நாள்தோறும்
கவிதை என் சுவாசம்
கவிதையே என் காதல்...
கவிதை நான் உறங்கும் என் தாய் மடி...
கவிதை என் தேடல்...
கவிதை என் வாழ்வு..
கவிதையே எனக்கான எல்லாம்....

சுவாசிக்கும் வரை வாசிப்பேன்
வாசித்த வரிகளை எந்நாளும் நேசிப்பேன்
இறுதிவரை கவிதையோடு இணைந்திருக்க ஆசை....






என் படைப்புகள்
kavitha செய்திகள்
பொன் அருள் அளித்த படைப்பில் (public) arulselvan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Nov-2015 11:19 pm

அன்று உனக்குப் புரியும்!

ஒரு நாள்
இந்த உலகை விட்டுப் போய்விடுவேன்
மீண்டும் வரப்போவதில்லை
சிலவேளை என்
தொலைபேசி இலக்கத்தைக் கண்டால்
நீ அழுவாய்
தனிமையில் நீ இருக்கும் வேளைகளில்
நான் இல்லாத தனிமையை
நீ புரிவாய்
என் குரலின் சத்தமோ
என் சிரிப்பின் சத்தமோ
உன் காதுகளுக்குக் கேட்காது
உனக்குத் தொல்லை தர
இனி யாருமில்லை
சிரிப்பூட்டுபவன் கோபமூட்டுபவன்
பகிடிவிடுபவன் பின்
மன்னிப்புக் கேட்பவன்
இனி இல்லாமல் போய்விடுவான்
ஆனாலும் உன் கண்களிலிருந்து
கண்ணீர் பொழியும்
ஆனாலும் நான்
எப்பவோ போயிருப்பேன்
திரும்ப வராதா பயணத்திற்கு
ஆகையால் என் அன்பை
ஏற்று அனுபவி
அதில்

மேலும்

அருமை 19-Apr-2018 2:27 pm
நன்றி. நீங்கள் தரும் ஊக்கம் என் ஆக்கங்கள் வளர இடும் உரம். 18-Nov-2015 6:43 pm
அருமை...! 18-Nov-2015 6:21 pm
நன்றி நண்பரே. அருமையெனக் கூறிப் பெருமை சேர்த்தீர். உங்கள் ஊக்கம் என் ஆக்கங்கள் மலரத் துணை செய்யும். 17-Nov-2015 9:47 pm
kavitha - திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2015 7:05 pm

ஒன்றும் புரியவில்லை
எதோ நினைக்கிறேன்
எல்லாம் சூனியம்
ஏதேதோ குரல்கள்


சிலபொழுது நிசப்தம்
சிலபொழுது பேரிரைச்சல்
பயம் பயம்
புரியாத பயம்


எங்கிருக்கிறேன்
என்ன செய்கிறேன்
எங்கிருந்தேன்
என்ன செய்தேன்

புரியவும் இல்லை
பிரியமான அரவணைப்புகள்
யார் இருக்கிறார்கள்?
என்னைச்சுற்றி

பார்க்க ஆவல்
பரிதவிக்கும் இதயம்


சிலபொழுது சிரிப்பு
சிலபொழுது அழுகை
ஏன் இந்தத் துடிப்பு?


மலரத்தான் ஆசை
நாளாக வேண்டுமே?

காண்பேனோ புது உலகை?
காணாமலே மறைவேனோ?

எத்தனை சிந்தனைகள்?
இந்த பிஞ்சு அரும்பிற்குள்?

மேலும்

அருமை..அருமை...வாழ்த்துக்கள் ..! 18-Nov-2015 6:42 pm
அபாரமான கவிதை! ஒரு குழந்தை என்னவெல்லாம் நினைக்கும் என்று இதை விட அழகாக தெளிவாக எழுத முடியுமா? இப்படி ஒரு கவிதை எழுதுவது கடினம்! குழந்தையின் பாத்திரத்திலேயே ஒன்றாகக் கலந்து எழுதப் பட்ட கவிதை! வாழ்த்துக்கள்! கவிதையை படிக்கும்போது குழந்தையின் துடிப்பை நாமும் உணர முடிகிறது! நாமும் குழந்தையின் பாத்திரமாக மாறி விடுகிறோம்! 14-Nov-2015 10:51 pm
அருமை.. 14-Nov-2015 5:03 pm
நல்ல கவிதை.. கொஞ்சம் எழுத்து பிழையை சரி செய்தால் இன்னும் சிறக்கும்... வெற்றி பெற வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Nov-2015 11:49 pm
kavitha - ரவிபூட்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2015 6:27 pm

அரை மணி நேரத்திற்கு முன்
பேசிய செல் போன் கானவில்லை
நேற்று எங்கோ வைத்த பர்ஸ்
வேலை காரியின் அதட்டலுடன்
இன்று தான் கிடைத்தது,
போன வாரம் மனைவி வாங்க
சொன்னதையும் மறந்து விட்டேன்,
சென்ற மாதம் வாசித்த புத்தகத்தின்
எழுத்தாளனின் பெயரை மாற்றி சொன்னேன்,
இப்படி எத்தனையோ மறதிகளை அடுக்கி கொண்டே போகலாம்
சலிப்பூட்டும் இந்த மறதிக்கு நடுவே
நான் உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பது மட்டும் நினைவில்.
-இரா.மீ.தீத்தாரப்பன்.

மேலும்

அருமை.. வாழ்த்துகள் 14-Nov-2015 5:02 pm
நன்று.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Nov-2015 12:04 am
kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2015 6:15 pm

காணும் போதே
காணாமல் போகும்
கானல் போல
ஆனதே
உன் காதல்...

உணர்வுகளில் ஊடுருவிய
என் காதலே ,
உதறிச்செல்லவா
உயிர் உருவில்
உலவி வந்தாய்....

வானம் மிஞ்சிய
கனவுகளோடு
கைகோர்த்து
கடந்து போன பாதைகளில்
நடந்து போகிறேன் ...
கண்ணீரோடு....

பிரிந்திடு
என்று
நீ சொல்லியிருந்தால் ,
பிரிந்திருப்பேன்!
உயிரே உன்னை...
என் உயிர் நீங்கி
இதழ் நீங்கா புன்னகையோடு
உனக்காக....

கனவுகள் இங்கே
கண்ட கண்கள் எங்கே ?
உணர்வுகள் இங்கே ,
உலவிய உயிரது எங்கே?

மெய்யாக நீ எனை
மறந்துபோனாய்..
இருந்தபோதிலும்
மெய்யோடு உயிராக
வாழும் உன் காதல்...
என் நிமிடங்கள்
காற்றோடு கரைந்து

மேலும்

அனுபவம் அதிகம் உள்ளதோ....? அருமை 29-Nov-2015 1:07 am
அருமையான கற்பனை. 31-Oct-2015 8:44 pm
kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2015 7:37 am

என் நாள் வாழ்வதும்
எந்நாளும்
நான் வாழ்வதும்
உன்னால்தான்.
என் சுவாசமே .....

மேலும்

அருமை 11-Oct-2015 3:42 pm
நன்றி நட்பே தங்களது வாழ்த்துகளுக்கு 10-Oct-2015 9:38 am
மாஸ் போங்க ........சூப்பர் 08-Oct-2015 9:51 am
நல்லா இருக்கு !! இன்னும்.நீட்டி இருக்கலாம் varigalai !! வாழ்த்துக்கள் !! 08-Oct-2015 8:30 am
kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2015 7:35 am

கலையாத கனவே
என் கனவிலும்
கலையாதே கனவே....

மேலும்

நன்றி .. 10-Oct-2015 9:39 am
நிரந்தரத் தூக்கத்தில்(பிணம் அல்ல) கனவு கலையாது. பிணத்துக்கு தூக்கம் கிடையாது.முழித்தால் கனவு கலையும். வேண்டுகோள்/விண்ணப்பம் வெறும் கற்பனையே. வைரம் ஜொலிக்க வில்லை.இன்னும் தீட்ட வேண்டி இருக்கிறது பட்டை. வாழிய நலம் !! 08-Oct-2015 7:45 am
kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2015 9:58 pm

நாம் எதிர்பார்க்கும் உறவு
எத்தனை இருந்தாலும் ,
நமை எதிர்பார்க்கும்
அன்பின் உறவு
அம்மா...

பிறக்கும் வரை
உனை காணத் துடிப்பாள்..
பிறந்தபின் உனை கண்டு ரசிப்பாள் ..
நீ இருக்கும் வரை ,
அவள் இறக்கும் வரை ,
உனக்காகவே இருப்பாள் அவள்...

அன்பில் தினம்
உனை அணைப்பது
அன்னை மனம்...

உயிர்வலி கொண்டபோது
கலங்காதவள்,
கண் கலங்கி நின்றிடுவாள் !!
அவள் உயிர் தந்த
உயிர் நீ
சிறு துயர் கொண்டால் ...

தோளோடு உனை அணைத்து ,
உன் தோளோடு
அவள் கை வைத்து ,
மெல்ல தட்டி
துயில சொல்லும்
அன்பின் தேசம் .....
உன் காதோடு
இதமாக கதைபேசும்
அன்னையின் சுவாசம் ....

மேலும்

என் அன்னைக்கு சமர்ப்பணம்...வாழ்த்துக்கள் தோழி 23-Jul-2015 10:45 pm
kavitha - kavitha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2015 7:00 pm

ஆயுள் முழுதும்
உடன் வருவதும்...
அழைத்தால்
உடனே வருவதும்
நட்பு மட்டும் தான்.....

மேலும்

கருத்து தந்த அனைத்து தோழமைக்கும் என் நன்றிகள் 23-Jul-2015 9:36 pm
ஆம்.... 05-Jul-2015 11:32 am
உண்மைதான்...அருமையாக சொன்னீர்கள் தொடருங்கள் 23-Feb-2015 9:06 am
நல்லாயிருக்கு 21-Feb-2015 1:20 pm
kavitha - kavitha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2015 7:03 pm

விழி மூடி தூங்கவா
நானுன் நினைவில்
என் இதயம் புதைத்து ,
நிரந்தரமாக.....
உனக்காக இருப்பதும்
உனக்காகவே இறப்பதும்
சுகம்தான் எனக்கு......

மேலும்

ஜலால் ஹூசைன் அளித்த படைப்பை (public) நா கூர் கவி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
27-Nov-2014 7:02 pm

கருவறைதனில் இடம் தந்த அன்னைக்கு பிறகு- உனது
மடியறைதனில் இடம் நீ அளித்தாய்.................
கருவிழி திறந்து நான் பார்க்கும்போதெல்லாம்- என்
கண்முன் தோன்றி ஆனந்தம் நீ அடைந்தாய்...............
உனது
கண்களால் பல கண்ணாம்மூச்சி ஆடி- என்
இதழ்களில் புன்னகையை நீ உதிரவைத்தாய்............
எனது
கண்களில் சிறுதூசி விழுந்தாலும்
கண்ணீர் வடித்து நீ துடித்தாய்............................
கைவீசி தனியாய் நான் நடக்கும்போது-என்
கரம் பிடித்து கல்வியை நீ உரைத்தாய்............
கல்வி மட்டும் உன்னை உயர்த்தாது என கூறி-பல
கனிவான பழக்கங்களையும் நீ கற்பித்தாய்...............
எனது
கனவுகளை நனவாக்க எப்போத

மேலும்

அருமை...... 07-Dec-2014 11:16 pm
அனைத்து நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி......................... 30-Nov-2014 6:24 pm
பாச பகிர்வு அருமை 28-Nov-2014 3:21 pm
பாசக் காவியம் நெகிழ்ந்தேன் ! 28-Nov-2014 3:30 am
kavitha - இணுவை லெனின் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2014 6:18 pm

பருவம் அடைந்த நீர்க்கற்று
ஒரு உருவம் அடைந்தது
அது வானதிடல் நின்று
வழுக்கி வீழ்ந்தது

காற்றினில் அடிபட்டு
கார்மேகம் உடைபட்டு
உடல் சிதறி உயிர் உருகி
கண்ணாடி கற்றைகளாய்
தரை வந்து சேர்ந்தது

புவி தன் ஆயிரம் கை கொண்டு
பல கோடி விரல் கொண்டு
பிரிந்த மகன் இணைந்தது போல்
பிரியமுடன் கட்டிக்கொண்டது

சிந்தி விழுந்த சில்லறை
துளிகளை ஒன்றாக்கி
நிறம் குணம் மணம் மாற்றி
தன்னுயிர் தந்தது

உயிர் பெற்ற மழைநீர்
ஓடியது வெள்ளமாய்
தனக்கென்று பாதை கொண்டு

தனித்தனியாய் வாழ்ந்தால்
தடயம் இன்றி போவோம்
ஒன்றாய் இணைந்து
ஓர் பாதை அமைப்போம்
வாழ்க்கை வெள்ளமாக

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (82)

தமிழரிமா

தமிழரிமா

சிவகாசி
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (82)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (83)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே