பொன் அருள் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பொன் அருள் |
இடம் | : canada |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 176 |
புள்ளி | : 37 |
மாட்டுப்பொங்கல்!
வயல் உழ வந்தாய்
எருவேற்றிக் கொண்டுபோக வண்டில் இழுத்தாய்
சுற்றிச் சுற்றி வந்து சூடடித்த்தாய்
சாணம் தந்தாய் எருவாக
நெல்லும் வைக்கலும் ஏற்றி வந்தாய்
இன்னும் எத்தனை எத்தனை செய்தாய்
நன்றி மறப்பவரோ தமிழர்
உனக்காக ஒரு நாள் மாட்டுப்பொங்கல் செய்கிறோம்
பொன் அருள் -16/01/2016.
தமிழர் தைப்பொங்கல்!தை பிறக்கும் வேளையில் நன்றி சொல்ல ஒரு நல்ல விழாசூரியனே உனக்கு நன்றி! நீயில்லாவிட்டால்ஒரு நெற்பயிர் கூட முளைக்காது ஏன் எதுவுமே நடக்காதுஎருதுகளே வயல் உழுதீர்கள் வண்டில் இழுத்தீர்கள் உங்களுக்கும் நாம் நன்றி சொல்லுகிறோம் முதல் நாள் முற்றத்திலே ஆதவனே உனக்குப்பொங்கிப் படைக்கிறோம் ஏற்றுக்கொள் இது தமிழர் நாம் உனக்குச் செய்யும் நன்றிக் கடன்எருதுகளே அடுத்த நாள் நாம் உங்களைநீராட்டி மாலையிட்டுப் பொட்டு வைத்துப் பழங்கள் ஊட்டி நல்ல தீனி தந்து வணங்குகிறோம்ஏற்றுக் கொள்ளுங்கள் எம் நன்றிக (...)
தமிழர் தைப்பொங்கல்!
தை பிறக்கும் வேளையில் நன்றி சொல்ல ஒரு நல்ல விழா
சூரியனே உனக்கு நன்றி! நீயில்லாவிட்டால்
ஒரு நெற்பயிர் கூட முளைக்காது ஏன் எதுவுமே நடக்காது
எருதுகளே வயல் உழுதீர்கள் வண்டில் இழுத்தீர்கள்
உங்களுக்கும் நாம் நன்றி சொல்லுகிறோம்
முதல் நாள் முற்றத்திலே ஆதவனே உனக்குப்
பொங்கிப் படைக்கிறோம் ஏற்றுக்கொள்
இது தமிழர் நாம் உனக்குச் செய்யும் நன்றிக் கடன்
எருதுகளே அடுத்த நாள் நாம் உங்களை
நீராட்டி மாலையிட்டுப் பொட்டு வைத்துப்
பழங்கள் ஊட்டி நல்ல தீனி தந்து வணங்குகிறோம்
ஏற்றுக் கொள்ளுங்கள் எம் நன்றிக் கடனை
வயல்களில் இறங்கி நீங்கள் உழுதீர்கள்
எரு வைக்கோல் என ஏற்றி ஏற்றி இழுத்த
புதிய ஆண்டு தீர்மானங்கள்!
தீர்மானங்கள் தொடர்கதை
நல்ல தீர்மானங்கள் எடுக்கவேண்டும்
அவை மீண்டும் மானம் இழக்கும்
நாளை முதல் தினமும் நடக்க வேண்டும்
வெளியில் சரியான குளிர்
நடை நடக்காது
நாளை முதல் குடிப்பதை விட வேண்டும்
போன வருடமும் இப்படித் தானே
மனம் கேட்குதில்லை
எதையும் நேரத்தோடு செய்ய வேண்டும்
மூட் சரியில்லை
நாளைக்குப் பார்ப்போம்
கோவிலுக்குப் ஒழுங்காகப் போகவேண்டும்
கடவுள் எங்கும் இருக்கிறார்
மனதுக்குள் கும்பிடலாம் தானே
மனத்தில் உறுதி வேண்டும்
பாரதியார் சொன்னாப் போல
தீர்மானங்கள் தொடர்கதை!
நினைவுகள்!
காலம் சில நினைவுகளை
சுமந்து கொண்டு
வேகமாக ஓடுகிறது
அடுத்த மாதம்
மீண்டுமொரு தைப்பொங்கல்
என் நினைவுகளில்
ஏனோ யுத்தகாலம்
ஆம் பால் பொங்குகிறது
அரிசி போட வேண்டும்
பொம்மர் வருமோ?
எனக்குள் ஒரு பயம்
அவளைக் கேட்கிறேன்
“பொம்மர் வந்தால் என்ன செய்வீர்?”
“பதுங்குகுழி இருக்குத்தானே
பாய்ந்திடுவேன் நான் அதற்குள்”
அவள் வார்த்தைகள்
இன்றும் என் காதில்
காலத்தால் நினைவுகள் அழிவதில்லை.
பொன் அருள் – 20/12/2015.
கிறிஸ்மஸ்!
அன்பு மயமானது
உறவுகள் ஓன்றுகூடும் திருநாள்
வெறுப்புக்கள் விருப்பங்கள்
கலந்தது நம் வாழ்வு
நீங்கள் வெறுத்தவர்கள் இருக்கலாம்
அவர்களுடன் பேசுங்கள்
தொலைபேசி மூலம் வாழ்த்துங்கள்
மன்னிப்புக் கேளுங்கள் மன்னித்து விடுங்கள்
நீங்கள் அளிக்கும் மன்னிப்பே உங்களின்
நிம்மதி, மகிழ்ச்சி, விடுதலை
உறவின் உன்னதத்தை அனுபவியுங்கள்
அன்பே இன்பம்!
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!
- பொன் அருள் 18/12/2015.
எங்கேயோ பிறந்தோம்
எங்கேயோ வளர்ந்தோம்
என்றோ ஒரு முறை சந்தித்தோம்
எப்பொழுதோ ஒரு முறை பேசினோம்
இன்று நட்பு என்னும் உறவில்
கைகோர்த்து செல்கிறோம்.....
இந்த நட்பில் சுகமோ துக்கமோ
நமக்கு சரிசமம்...
இதில் பிரிவு என்பது இல்லை
நீயும் நானும் வாழும் வரை...
தனிமையில் எனை
புலம்ப வைக்கிறான்,
இரவுகள் தலையணை
நனைக்க வைக்கிறான்,
இருதயம் ஒரு நொடி
உறைய வைக்கிறான்,
இருந்தாலும் சிறகின்றி
பறக்க வைக்கிறான்!
உன் வார்த்தை தரும் இதம்
வரிகளில் வடித்திட
முடியாத பேரின்பம்!
ஆயிரம் பேர் சூழ இருந்தும்,
உணர்கிறேன் தனிமையதை,..
நீயொருவன் கூட இருக்க,
அடைகிறேன் - ஆயிரம்
யானை பலம்!
கடிகார முள்ளே,
சபிக்கிறேன் உன்னை நான் ...
அவன் அருகிருக்கும் நிமிடங்களை
அசுர வேகத்திலும்,
அவன் இல்லாத நிமிடங்களை
ஆமை வேகத்திலும் கடந்து,
ஏன் எனக்கு மட்டும்,
பராபட்சம் காட்டுகிறாய்
உண்ண
உணவு இன்றி
ஒரு வேலை
கை ஏந்தி.......
உடுத்த
உடை இன்றி
கந்தல் துணி
நான் ஆகி........
இருக்க
இடம் இன்றி
விலகி நிற்க்கும்
விலங்காகி.......
வாழும்
என்னைக் கண்டு
பைத்தியம் எனக் கூறும்
எந்த பைத்தியம் அறியும் !.......
என்னை
நான் முழுமையாக
இழந்து உன்னோடு
வாழ்கிறேன் என்று !!......
-தஞ்சை குணா