புதிய ஆண்டு தீர்மானங்கள்

புதிய ஆண்டு தீர்மானங்கள்!
தீர்மானங்கள் தொடர்கதை
நல்ல தீர்மானங்கள் எடுக்கவேண்டும்
அவை மீண்டும் மானம் இழக்கும்
நாளை முதல் தினமும் நடக்க வேண்டும்
வெளியில் சரியான குளிர்
நடை நடக்காது
நாளை முதல் குடிப்பதை விட வேண்டும்
போன வருடமும் இப்படித் தானே
மனம் கேட்குதில்லை
எதையும் நேரத்தோடு செய்ய வேண்டும்
மூட் சரியில்லை
நாளைக்குப் பார்ப்போம்
கோவிலுக்குப் ஒழுங்காகப் போகவேண்டும்
கடவுள் எங்கும் இருக்கிறார்
மனதுக்குள் கும்பிடலாம் தானே
மனத்தில் உறுதி வேண்டும்
பாரதியார் சொன்னாப் போல
தீர்மானங்கள் தொடர்கதை!