புத்தாண்டு பூ பூத்துவிட்டது

பூத்துவிட்டது பூத்துவிட்டது
புத்தாண்டு பூ பூத்துவிட்டது
போன வருடத்தின் கடைசி நாளில்
பழைய பூ உதிர்ந்து விட்டது
பழைய பூவில் படிந்த மாசுகள்
பெய்த மழையில் கரைந்து விட்டது
போன வருடம் மனிதம் செய்த நன்மைகள்
புதிய பூவிற்கு உரமாகிவிட்டது
புத்தாண்டில் புதியதாய்
பல சபதம் செய்வோம்
அரசியலை தெல்லியதொரு
நீரோடையாக்குவோம்
குத்தாட்டம் போடும்
கூத்தாடிகள் பின்னாலே
கொடி பிடித்து அலையும்
கூரற்ற செயலை ஒழிப்போம்
கைய்யூட்டை ஒழிப்போம்
பொய் பேச்சு தவிர்ப்போம்
உறவுகளை மதிப்போம்
பிரிவுகளை தவிர்ப்போம்
பேராசைகளை வெறுப்போம்
அன்புதனை விதைப்போம்
சுத்தம் சோறு போடும் – என்று
தாளில் மட்டும் எழுதும்
வெறும் கவியாய் இராமல் - உணர்ந்து
சுத்தம் செய்ய களம் இறங்கி
மகாகவியாய் மாறுவோம்
சட்ட திருத்தம் வேண்டிடுவோம்
கள்வர்களை கண்ட இடத்தில் கொல்வதற்கு
சட்ட திருத்தம் வேண்டிடுவோம்
கற்பழிக்கும் காம நாய்களை
கல்லால் அடித்து கொல்வதற்கு
சட்ட திருத்தம் வேண்டிடுவோம்
கல்விதனை இலவசமாய் கற்பதற்கு
சட்ட திருத்தம் வேண்டிடுவோம்
கையூட்டு வாங்கும் கழுதைகள் நெற்றியில்
கையூட்டு கேட்ட கபோதி என்று
காலத்திற்கும் அழியா வண்ணம்
பச்சை குத்துவதற்கு.....
அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைகளே.....பிறக்கும் புது வருடம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் வெற்றிகரமான இன்பமயமான வருடமாக அமைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டிக்கொள்கின்றேன்....