கிறுக்கன்

அந்த
பறவைக் காவடிக்கு
செடில் குற்றியது போல
எழுத்தாணி
ஒன்றை
அழுத்தமாய்
பதித்திருக்கிறேன்
நாவில். ....

எண்ண
அலையின்
மூர்க்கத்தனமான
வருடலில்
கரை எங்கும்
எழுத்துக் கறைகள்

உலக
அழுக்கை
ஜெயித்துக்
கொண்டேயிருக்கும்
உணர்வெதிலும்
துக்கம் உட்கார
மறுத்தது

எச்சி இலை
தொட்டியில்
பசி தீர்த்த
நாய்க்குட்டியின்
வாலாட்டல் போல
என் கிறுக்கல்களை
பசி தீர்த்து
பாராட்டின

கழுதை வாலில்
மை தோய்த்து அசைத்த
கீறல்கள்
பரிசு பெற்று
புகழ்பெற்றது போல
கரித்துண்டால்
சுவரில் கீறிய
என் கிறுக்கல்கள்
பேசப்பட்டன

என்ன தான்
நடந்தாலும்
என் நிழல் கூட
என்
காலடியில்
தலை வைத்து தூங்க
ஒரு போதும்
சம்மதித்ததே இல்லை ....!

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (1-Jan-16, 8:42 am)
Tanglish : kirukan
பார்வை : 108

மேலே